பயணத்தடைகளால் பதற்றமடையும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள்

  • 68

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுவருவது சிறந்தவொரு நடவடிக்கையாகும். என்றாலும் இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகளால் பலரும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள ஒரு தரப்பினரே பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி 2020/2021 ஆம் கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகைமை பெற்ற மாணவர்களாகும்.

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலப் பகுதி 2021.05.21 முதல் 2021.06.11 ஆம் திகதி வரையாகும். என்றாலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி கையேட்டை பெறுவதில் பல சிரமங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர்.

மாற்றுத்தீர்வாக தபால் மூலம் புத்தகங்களை பெறலாம் என்று குறிப்பிட்டாலும் பல கிராமங்களிலும் கிராமத்தை அண்மிய  நகரங்களிலும் கொரோனா பரவல் காரணமாக தபால் நிலையம் மூடப்பட்டுள்ளது.

பல மாணவர்களுக்கு இணையதளம் மூலம் புத்தங்களை பி.டி.எஃப் முறையில் கொள்வனவு செய்யுமாறு கூறினாலும் அவற்றை வாசிப்பது சிரமம் என்று தெரிவிக்கின்றனர். மேலும் பல கிராமப்புறங்களில் இணையதள சேவைகள் ஆமை வேகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல சேவைகளை அத்தியவசியத் சேவைகளாக வரையறுத்து அவற்றை மேற்கொள்ள நேற்று (27.05.2021) அதி விசேட வர்த்தமானி மூலம் அனுமதியளித்த போதும் அத்தியவசியத்  சேவை என்ற வரையறைக்குள் புத்தக விற்பனை நிலையங்கள் உட்படுத்தவில்லை. இதனால் பிரதான நகரங்களில் புத்தக விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இன்று (28.05.2021) முதல் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதிவரை (11.06.2021) பயணத்தளர்வு பெரும்பாலும் மூன்று நாட்கள்தான் வழங்கப்படும். இதற்குள் (ஏனைய) மாகாணம் விட்டு (மேல்) மாகணம் சென்று புத்தகம் வாங்க அனுமதி கிடைக்குமா? என அங்கலாய்கின்றனர்.

எனவே இம் மாணவர்களின் நலனில் கருத்திக் கொண்டு குறைந்த பட்சம் விண்ணப்பிப்பதற்கான காலப்பகுதியை நீடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் இதனை வௌியிடும்போது தொடர்ந்து ஜூன் 07 ஆம் திகதிவரை  பயணத்தடை விதிக்கப்படுவதாக செய்திகள் வௌிவந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

伊卜努阿萨德

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுவருவது சிறந்தவொரு நடவடிக்கையாகும். என்றாலும் இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகளால் பலரும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள ஒரு தரப்பினரே பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிக்க…

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுவருவது சிறந்தவொரு நடவடிக்கையாகும். என்றாலும் இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகளால் பலரும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள ஒரு தரப்பினரே பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிக்க…