பிள்ளைகளை வளரவிடுவதா? அல்லது வளர்ப்பதா?

  • 13

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆற்றல் உள்ளவர்களாகவும், நல்ல குழந்தைகளாகவுமே பிறக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தீயவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் மாறுவது பெற்றோர்களின் வளர்ப்பிலேயே தங்கியுள்ளது.
இதனை இஸ்லாமும், இன்றைய உளவியலும் கூறுகின்றதைப் பார்க்கலாம்.

அந்த வகையில் உங்கள் குழந்தைகள் தனித்துவமானவர்கள், மற்றவர்கள் போன்று அவர்கள் இல்லை. எனவே மற்ற குழந்தைகள் செய்வது போன்று தன் பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்ப்பார்ப்பது மடமைத்தனமான செயல் என்பதை உணர்ந்து அவர்களை தனித்துவமாக வளர்க்கவேண்டும், அதே போல் பயிற்றுவிக்கவும் வேண்டும்.

பொதுவாக ஒரு குழந்தையின் திறமைகள் பெற்றோர்களிடமிருந்து கடத்தப்படும் அதேவேளை பிள்ளைகள் சூழலுக்கு ஏற்ற முறையில் பெற்றோர்களால் பயிற்றுவிக்கப்படும் பொழுது பாரிய தாக்கம் ஏற்படும். இதனையே பெற்றோர்கள் ஆரம்பமாகச் செய்ய வேண்டும். அதிலும் முக்கியமாக பிள்ளைகளின் ஆசைகளை அறிந்து அதற்காக ஆர்வமூட்டல் அவசியமாகும்.

பெற்றோர்கள் இன்று குறிப்பிட்ட சில இலக்குகளை கண்டும், கேட்டும், பார்த்தும் ஆசைப்பட்டு அதை தங்கள் குழந்தைகளில் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை இன்றைய காலகட்டங்களில் காணக்கூடியதாக உள்ளது.

அவ்வாறல்லாமல் தம் குழந்தைகள் சிறுபராயத்தில் இருந்தே ஏதோ ஒரு துறையில் பரீட்சயமாகவும், ஆர்வமாகவும் இருப்பார்கள்.அதனை உற்றுநோக்கி உட்சாகப்படுத்துவது பெற்றோர்களின் பாரிய பொறுப்பாகும்.எனவே நாம் எவ்வாறு இருந்தோம் என்பது முக்கியமில்லை நம் வருங்கால சந்ததிகளை வரமாக மாற்றுவது எமது பார்வையிலும் கண்காணிப்பிலுமே உள்ளது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

கலீல் ஜிப்ரான் என்ற அறிஞர், “குழந்தைகளது கனவுகளை வளர்த்துவிடுங்கள். சற்று உயர்ந்த இலட்சியத்தையுடைய கனவுகளை அவர்கள் காணட்டும். அப்போது தான் அதனை அவர்கள் பிற்காலத்தில் அடைந்து கொள்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக, பிள்ளைகளின் ஆசைகளை, இலட்சியங்களை அடையாளங்கண்டு பயிற்றுவிக்கும் போது உயர் இலக்கை அடைவதில் சிரமம் ஏற்படாது என்பதை அறியலாம்.

ஆனால் இந்த இடத்தில் தான் பெற்றோர்கள் மிகப்பெறும் தவறை விடுகிறார்கள். அவர்களின் போக்கில் விட்டுவிடல், ஆசைகளைக் காதுகொடுத்து கேட்காமை, மற்ற பிள்ளைகள் போல் ஆகவேண்டும் என்று திணித்தல் போன்ற படு பயங்கரமான செயல்களை செய்யும் பெற்றோர்களை அவதானிக்கிறோம். அதேபோல் ஒரு படி முன்னேறி வரும் உங்கள் குழந்தைகளை தட்டிக்கொடுத்து, பாராட்டி, ஆர்வமூட்டவேண்டும். ஆனால் இன்று இது மிகவும் குறைந்து கொண்டு வருகிறதை காணலாம்.

உலகப்பிரசித்தி பெற்ற ஒரு கலைப் படைப்பாளியிடம் தங்களது வெற்றியின் இரகசியம் என்ன என்று கேட்ட போது, “நான் சிறுவயதில் ஈடுபடும் ஒவ்வொரு படைப்பு முயற்சியின் போதும் எனது தாய் அவளை மெச்சி, பாராட்டி உச்சி குளிர்ந்தமை தான் ” என்று கூறினார்.

எனவே உங்கள் குழந்தைகளை அவர்களின் போக்கில் வளரவிடாமல் குழந்தைகளின் கனவுகளுக்கும், ஆசைகளுக்கும் ஏற்ற விதத்தில் அவர்களை நெறிப்படுத்துவது ஒவ்வொரு பெற்றோர்களினதும் கடமை என்பதை உணரவேண்டும்.

Faslan Hashim

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆற்றல் உள்ளவர்களாகவும், நல்ல குழந்தைகளாகவுமே பிறக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தீயவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் மாறுவது பெற்றோர்களின் வளர்ப்பிலேயே தங்கியுள்ளது. இதனை இஸ்லாமும், இன்றைய உளவியலும் கூறுகின்றதைப் பார்க்கலாம். அந்த வகையில்…

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆற்றல் உள்ளவர்களாகவும், நல்ல குழந்தைகளாகவுமே பிறக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தீயவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் மாறுவது பெற்றோர்களின் வளர்ப்பிலேயே தங்கியுள்ளது. இதனை இஸ்லாமும், இன்றைய உளவியலும் கூறுகின்றதைப் பார்க்கலாம். அந்த வகையில்…