கிழக்கு மண் ஈன்றெடுத்த முத்து

  • 23

இளமையிலே தாயை இழந்தும்
திருமறையை நெஞ்சில் சுமந்த ஹாபிழும் நீரே!
அகராதி புரட்டாமலே ஹாபிழ் என்ற
சொல்லுக்கு அர்த்தம் கற்பித்தவரும் நீரே!

உயர்கல்வியை உயர் இடத்தில் கற்று
பொறியியலாளராக பூமியில் பவனி வந்த
நேரிய உழைப்பாளியும் நீரே!

ஊழல் மோசடி இன்றி
பலருக்கு உத்தியோகம் தேடிக்கொடுத்த
கொடை உத்தமரும் நீரே!
சொந்த செலவிலே சேவை மன்றம் அமைத்து
எம் துயர் துடைத்த கரங்களும் நீரே!

பணத்தால் வாக்கை
பெற்றவர்களுக்கு மத்தியில்,
உம் குணத்தால் இடம் பிடித்து
மானிடர் மனதை வென்ற
சாதனை வீரரும் நீரே!

இருள் சூழ்ந்த கிழக்கிற்கு
மெழுகாய் உருகி ஒளி தந்த
முதலமைச்சரும் நீரே!

இன்று சூரியனாக
பாராளுமன்றத்தில் உதித்து,
கிழக்கிற்கு விடியலை தர இருக்கும்
முதல் உறுப்பினரும் நீரே!

இன, மத, பேதம் பாராது
எல்லோருக்கும் அன்பை பொழியும்
மாமழையும் நீரே!

தனக்கு எதிரான விமர்சனங்களைக் கூட
புன்னகையால் கடந்து செல்லும் மாவீரனும் நீரே!

உலகம் காணா ஏழைகளின்
கண்ணீரை துடைத்த செங்கோலும் நீரே!
ஆன்மீகத்திலும் மேன்மையாக திகழ்ந்த
அழகிய மலரும் நீரே!
நடமாடும் அட்சய கிண்ணமும் நீரே!

இனி பாரை ஆளும் எம் கோமானும் நீரே!
அஷ்ரப் மேதைக்கு அடுத்து
விண்ணில் உதித்த
ஒளிமிகு தாரகையும் நீரே!

கிழக்கை நந்தவனச் சோலையாக மாற்றப் போகும்
மணங்கமழும் சந்தனமும் நீரே!
எம் மனம் குளிரும் வந்தனமும் நீரே!

உம் நற்குணங்களை கண்டு
தங்கமும் மண்டியிடும் காண்பீரே!

காத்திருந்து காவியமாகிய
கவி எழுத்தும் நீரே!
காலங்களால் அழிக்க முடியாத
நினைவின் சொத்தும் நீரே!
கடலுக்குள் மூழ்கி மூச்சிறைக்காமல்,
இறை அருளால் கிழக்கு மண்
ஈன்றெடுத்த முத்தும் நீரே!

RAHFATH AARA MOHAMED RIYAZ
BA (R) SEUSL
Dip in English (R)
Dip in HRM (R)
Union Researcher SEUSL

இளமையிலே தாயை இழந்தும் திருமறையை நெஞ்சில் சுமந்த ஹாபிழும் நீரே! அகராதி புரட்டாமலே ஹாபிழ் என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்தவரும் நீரே! உயர்கல்வியை உயர் இடத்தில் கற்று பொறியியலாளராக பூமியில் பவனி வந்த நேரிய…

இளமையிலே தாயை இழந்தும் திருமறையை நெஞ்சில் சுமந்த ஹாபிழும் நீரே! அகராதி புரட்டாமலே ஹாபிழ் என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்தவரும் நீரே! உயர்கல்வியை உயர் இடத்தில் கற்று பொறியியலாளராக பூமியில் பவனி வந்த நேரிய…