வரலாற்றில் மத்திய மாகாணம்

இலங்கையின் நவீன மாகாணங்களில் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆதிகாலத்திலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாகும்.

அனுராதபுரம், பொலன்னறுவை இராசதானி காலங்களில் இது மலையரட்டை, மலைய மண்டலம் என்று பலவாறாக அழைக்கப்பட்டு வந்துள்ளது.

‘செங்கடகல அல்லது சிறீவர்ணபுர’ எனும் புகழ் மிக்க நகரம் காணப்படுவதும் இம்மாகாணத்தின் தனிச் சிறப்பாகும்.

மன்னன் நிஸ்ஸங்கமல்லன் காலம் இலங்கையை அவர் திரி சிங்களாதீஸ்வர என்று அழைத்து இருந்தான். இங்கு இம்மன்னனால் குறிப்பிடப்பட்ட முக்கிய ஒரு பிரதேசமாக கண்டியை உள்ளடக்கிய மத்திய மலை பகுதி காணப்படுகிறது.

இதன் வரலாற்று முக்கியதுவத்தின் உச்ச கட்டம் இலங்கையை கரையோர மாகாணங்களை போர்த்திகேயர், ஒல்லாந்தர் ஆண்ட போது அதன் ஆளுகைக்கு உட்படாது தனித்து நின்ற பகுதியாகும்.

அவர்களுக்கு எதிராக நாட்டின் மத்திய பகுதியில் காணப்பட்ட இயற்கை பாதுகாப்புகளை அடிப்படையாக கொண்டு தனது சுதந்திரத்தை இறுதிவரை அதாவது 1815 ஆங்கிலேயர் கைப்பற்றும் வரை ஒரு அரசு நிலவியமை மத்திய மாகாணம் புகழ் பெற காரணமாகிற்று.

இங்கு பேணப்பட்ட சுதந்திரம் கரையோரப் பகுதிகளில் அந்நியர் ஆட்சியினால் இழக்கப்பட்ட பெளத்த சமய தனித்துவத்தை பேணவும் உதவியது.

மேலும் இங்கு உபசம்பதா சடங்குகளும், சமய மீள் கட்டமைப்புகளும் ஏற்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக போதிமாதவின் பற்சின்னத்தை பாதுகாக்கும் தலதா மாளிகை இங்கு நிலைபெற்றதாலும் இம்மாகாணம் சிறப்படைகிறது.

தொன்மை காலத்திலிருந்து புகழ் பெற்ற ஒரு இராசதானியாக விளங்கிய கண்டி இராசதானி புகழ் பெற்ற ஒரு கலை வடிவத்தை ஆக்கி அளித்தது. அந்த வகையில் தனிக்கலை வடிவம் ஏற்பட்ட இடம் என்ற வகையிலும் சிறப்பு பெறுகிறது.

இம்மாகாணத்தில் காணப்படும் மலைப் பிரதேசம், குன்றுகள், கணவாய்கள், மலைத்தொடர்கள் என்பவற்றையும், ஆதி காலத்திலத்திலிருந்து அடர் வனத் தொகுதிகளையும் கொண்டிருந்தன் காரணமாக அனுராதபுர, பொலன்னறுவை சுதந்திர போராட்ட காரர்களை அரவனைத்து புகலிடம் வழங்கியும், போராயத்தங்களை இங்கேயே மேற்கொண்டமையாலும் முக்கிய்த்துவம் பெறுகிறது. (உ+ம்) மன்னன் விஜயபாகு பாசறை அமைத்து தங்கிய வாகிரிகலை குன்றும் இங்கே அமைந்துள்ளமையும் இதன் சிறப்பம்சமாகும்.

மிக நீண்ட காலத்திற்கு முன்னதாகவே வர்த்தக ரீதியாக இப்பகுதி மிகப் புகழ் பெற்று விளங்குகிறது. பாக்கு, மிளகு, தேன், மெழுகு, யானை, யானை தந்தம், வாசனை சரக்குகள் என்பவற்றை பெற்றுக் கொள்ளவதற்காக இந்திய, உரோம, அரேபிய வர்த்தகர்கள் நீண்ட காலமாக இப்பகுதியுடன் தொடர்புகளை கொண்டிருந்தனர்.

ஆங்கிலேயர் காலப் பகுதியில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இறப்பர், தேயிலை ஆகிய முக்கிய ஏற்றிமதி வருவாய்களாக மாறியமையாலும் இன்று வரை அவை இலங்கையின் முக்கிய ஏற்றுமதி பயிர்களாகவும் வருமான மார்க்கங்களாகவும் காணப்பட்டதாலும் மத்திய மாகாணம் முக்கியம் பெறுகிறது.

இவ்வாறு மத்திய மாகாணமானது அன்று முதல் இன்று வரை தனிச்சிறப்பு பெற்றே விளங்கிறது.

ZEENA NAFEES
(BA) SPECIAL IN GEOGRAPHY ®️
SEUSL
Tags: