ஊரார் கோழியை அறுத்து தன் பெயரில் கத்தம் கொடுக்கவுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்

  • 55

முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் அச்சுறுத்தலாக அமையும் என்று எதிர்பார்த்த அரசில் முஸ்லிம் சமூகத்தை கடந்து இன மத பேதங்களுக்கு அப்பால் மனித இனம் உட்பட ஏனைய வளங்களுக்கும் (கடல், மீன்) அச்சுறுத்தலாக இந்த அரசின் செயற்பாடுகள் அமைந்துவிட்டது.

இந்த அரசாங்கம் பற்றி அச்சுறுத்தி பாராளுமன்றம் சென்று அரசாங்கத்துடன் இருபதாம் திருத்தச் சட்டம், கொழும்பு துறை முக நகர சட்டம் என அனைத்திலும் ஒன்றாக இணைந்து கொண்ட முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்கள் எனக் கூறிக் கொள்ளுபவர்கள், அரசாங்கத்துடன் அன்று முதல் இன்றுவரை இணைந்து செயற்படும் ஆளுந் தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் எதிர் கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகள் என அனைவரும் முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளில் ஒரு வித்தியாசமான போக்கையே கையாள்கிறார்கள்.

அதற்கு பொருத்தமான ஒரு கிராமிய பேச்சு வழக்கே ஊரார் கோழியை அறுத்து தன் பெயரில் கத்தம் கொடுத்தல். (கத்தம் என்பது முஸ்லிம் சமூகத்தில் மரணித்த ஒருவரின் நினைவாக வழங்கப்படும் விருந்து)

ஒரு தலைவர் என்றால் பிரச்சினையின் ஆரம்பம் முதல் இறுதிவரை களத்தில் இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பிரச்சினைகள் மற்றும் அழுத்தங்களை சமூகத்திலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும்தான் வரும்வரை மௌனமாக நின்றுவிட்டு, பிரங்சினைகள் தீர்ந்ததன் பின்னர், பொதுமக்களின் பங்களிப்பில் பெற்றுக் கொண்ட வெற்றிக்கு நாம்தான் காரணம் என்று வெற்றி(று) ப் பதிவுகளை இடக் காத்துக் கொண்டுள்ளனர்.

இதனை நாம் கொரோனா விடயத்தில் தெளிவாக அவதானித்தோம்.

ஜனாஸா அடக்க முடியும் என்று கடந்த பெப்ரவரி மாதம் மனித உரிமை பேரவை அழுத்தத்திற்கு பயந்து அனுமதித்த போதும் சிலர் நாம்தான் காரணம் என்று வீர(ண்) அறிக்கைகளை விட்டிருந்தனர். அதிலும் ஒருவர் மரணித்தவர்களின் எண்ணிக்கையை 50% ஆல் குறைத்து அரசியல்வாதிகளை பாராளுமன்றத்தில் சுத்தப்படுத்தியிருந்தார். அவ்வாறே அண்மையில் முஸ்லிம் கொரோனா ஜனாஸாக்களை இறக்காமத்தில் அடக்குவதற்கு அனுமதித்த மறுநாள் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு நான்தான் காரணம் என்று பதிவிட்டதை அவதானித்தோம்.

அவ்வாறே தேசிய பிரச்சினைகளை முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகள் பேசும் வீதமும் குறைவாகத்தான் உள்ளது. இதனால் கொழும்பு துறைமுக சட்டம், கப்பல் விபத்து என்பவற்றில் முஸ்லிம் கட்சிகளின் குரல்கள் மௌனித்து இருந்தன.

ஆனால் எதிர் கட்சி, ஆளுங் கட்சி ஒரு சில முஸ்லிம் உறுப்பினர்கள் தமது பொறுப்புக் கூறலுக்கமைய அறிக்கைகளை விட்டிருந்தனர்.

தற்போது நாம் உள்ள காலப்பகுதி பயணத்தடைச் சட்டக் காலப்பகுதியாகும். இக் காலப்பகுதியில் பொதுமக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினையே பொலிஸாரிடமிருந்து மரண அச்சுறுத்தலாகும். ஆனால் பிரபலங்களுக்கு அரச மரியாதையும் காணப்படுகின்றது.

பொலிஸாருக்கு சந்தேக நபர்களை கைது செய்து தீதிமன்றத்தில் முன்னிறுத்தலாம். ஆனால் கொலை செய்வது அல்லது கொலைக்கு துணை போவதற்கு அதிகாரம் இல்லை.

பயணத்தடைச் சட்டம் அமுலாகி மூன்று வார காலப்பகுதியில் மூன்று மரணங்கள் பதிவாகியிருந்தன. இது தொடர்பாக நாம் கடந்த கட்டுரையில் காணொளிகளுடன் தொகுத்து வழங்கியிருந்தோம்.

குறித்த மூன்று மரணங்களை மத ரீதியாக அவதானித்தால் தென் மாகாண சிங்கள, கிழக்கு மாகாண தமிழ், மேல் மாகண முஸ்லிம் சமூகத்தை சேர்த்த ஒருவர் வீதம் மூவர் பலியாகியுள்ளனர். ஆனால் குறித்த சம்பவம் தொடர்பில் உரையாற்றிய பொதுமக்கள் பிரதிநிதி யாரென்று தேடினால் வெலிகம நகர சபைத் தலைவர் ரெஹான் விஜேவிக்ரமா, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகியோர் மாத்திரமாகும்.

இங்கு இனம், பிரதேசம் என்ற அடிப்படையில் பிரச்சினையின்போது ரெஹான், சாணக்கியன் ஆகியோரின் பங்களிப்பு அப்பிரதேச மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நிறைவேற்றியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இனம், மதம், மாவட்டம், மாகாண பேதங்களை மறந்து பாணந்துறையில் மரணித்த சர்ச்சைக்குரிய மரணத்தின் இறுதிச் சடங்கிற்கு வடக்கில் இருந்தும்,கிழக்கில் இருந்தும் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் வெலிகம, மட்டக்களப்பு, பாணந்துறை ஆகிய மூன்று பிரதேசங்களிலும் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் நீதியான விசாரணை கோரி அறிக்கை விட்டிருந்தார்.

ஆனால் நேற்றிரவு அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மேல் மாகாண, களுத்தறை மாவட்ட முஸ்லிம் நபரின் மரணம் தொடர்பில் முஸ்லிம் சமூக அரசியல்வாதிகள், களுத்தறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள், மேல்மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாஸாவில் கலந்து அழுத்தம் கொடுத்தார்களா? என்று பிரதேச மக்களிடம் கேட்டால்,

அரசியல் சாக்கடையில் குளிர்காய்பவர்கள், தமக்கு ஏதேனும் நஷ்டம் வந்து விடுமோ தம் அரசியல் வாழ்க்கை முடிந்து விடுமோ எனக்கருதுபவர்கள் பெரும்பாண்மை மக்களின் ஆதரவிலே உயிர் வாழ்பவர்கள், பெயரடையாளங்களின் மட்டுமே சமயத்தை வெளிக்காட்டும் பச்சோந்தி அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவில்லை என்றே தெரிவிக்கின்றனர். ஆனால் மக்களே ஒன்றிணைந்து தீர்வைப் பெற்றுக் கொண்டால் நம் பெயரையும் சமூக வலைத்தளங்களில் பதிவதற்கு காலுக்கும் கைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வளவுக்கும் ஆளும் கட்சியிலும் எதிர்கட்சியிலும் களுத்தறை மாவட்டம் உட்பட மேல்மாகணத்தில் பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கையின் மேற்கில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணத்தின் இறுதிச் சடங்கிற்கு வடக்கில் இருந்தும்,கிழக்கில் இருந்தும் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் இடம்பெற்ற அநியாயமான மரணத்திற்கு எதிராக சாணக்கியனும், ரெஹானும் குரல் கொடுத்துள்ள நிலையில், அஸாத்சாலி சிறைக்கு வெளியே இருந்திருந்தால் அவரின் வட்ஸ்அப் ஒலிப்பதிவை கேட்டாவது முஸ்லிம் சமூகத்திற்காக ஒருவர் குரல் கொடுத்தார் என ஆறுதல் அடையலாம் என கட்டுரையை எழுதும் போது தோன்றியது.

நாடு எதிர்பார்ப்பது செல்வாக்கு உள்ளவர்களுக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளை அல்ல. இன மத பேதங்களை கடந்து நாட்டிற்கு சேவையாற்றும் அரசியல்வாதிகளையாகும்.

ஊரடங்கு, பயணத்தடை, மசம் இனம் மாவட்டம் பிரதேசம் என்று காரணங்களைக் கூறி மௌனிப்பதற்கு பதிலாக வடக்கில் பிரச்சினை என்றால் தெற்கிலிருந்து குரல் கொடுப்பவரையும், கிழக்கில் பிரச்சினை என்றால் மேற்கில் இருந்து குரல் கொடுக்கும் தலைவர்களையாகும்.

சாணக்கியனும், ரெஹானும் இடம்பெற்ற அநியாயமான மரணங்கள் தொடர்பில் நியாயமான விசாரணை கோரியுள்ளனர். அவ்வாறே பொது மக்கள் அனைவரும் குறித்த விடயத்தில் நீதியை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். ஆனால் முஸ்லிம் சமூகத்தில் உள்ள அரசியல்வாதிகளோ இங்கும் ஊரார் கோழியை அறுத்து தன் பெயரில் கத்தம் கொடுக்க காத்துக் கொடுக்க காத்துக்கொண்டுள்ளனர்.

伊卜努阿萨德

முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் அச்சுறுத்தலாக அமையும் என்று எதிர்பார்த்த அரசில் முஸ்லிம் சமூகத்தை கடந்து இன மத பேதங்களுக்கு அப்பால் மனித இனம் உட்பட ஏனைய வளங்களுக்கும் (கடல், மீன்) அச்சுறுத்தலாக இந்த அரசின்…

முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் அச்சுறுத்தலாக அமையும் என்று எதிர்பார்த்த அரசில் முஸ்லிம் சமூகத்தை கடந்து இன மத பேதங்களுக்கு அப்பால் மனித இனம் உட்பட ஏனைய வளங்களுக்கும் (கடல், மீன்) அச்சுறுத்தலாக இந்த அரசின்…