பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றம்

  • 103

இலங்கையில் ஆரம்ப காலத்தில் எழுத்துக்களின் அறிமுகம் பிராமிய மொழியில் தொடங்கி அனுராதபுர காலத்திலிருந்தே வளர்ச்சி அடைந்து சென்றதை வரலாற்று மூலாதாரங்களின் மூலம் அறிலாம்.

அது பின்னர் 1515 இல் இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கேயர், 1638 இல் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் கரையோரங்களில் பரிஸ் பாடசாலைகள் அமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 1798 இல் ஆங்கிலேயர் ஆட்சியிலும் விரிவடைந்து சென்றதை அறிய முடிகிறது.

1.ஆளுனர் பிரட்றிக்நோர்த் (1798-1805)

முதல் ஆளுனரான பிரட்றிக்நோர்த் (1798-1805)
கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

  • ஆரம்பதில் அவர் கல்வி நடவடிக்கைளுக்காக ஒல்லாந்தர் கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டார்.
  • கிறிஸ்தவ சமய சூழலிலான மேற்கத்தேய முறையிலான கல்வியை வழங்க தீர்மானித்தார்.
  • கொட்னர் அடிகளினதும் மிஷனரி குருமார்களினதும் உதவிகளை பெற்றுக் கொண்டார்.
  • அரசாங்கத்துக்கு தேவையான எழுதுவினைஞர்களையும் கிராமத் தலைவர்களையும் பயிற்றுவிக்கும் முகமாக இங்குள்ள கனவான்களின் பிள்ளைகளுக்காகவும் கொழும்பு அகடமி தாபனத்தை உருவாக்கினார்.

2. ஆளுனர் றொபெட் பிரவுண்றிக் (1812-1820)

1812 இல் பிரவுண்றிக் ஆளுனர் காலத்தில் மிஷனரிகள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது.

  • இங்கிலாந்து மிஷனரி
  • லண்டன் மிஷனரி
  • பப்டிஸ் மிஷனரி
  • வெஸ்லியன்மிஷனரி
  • அமெரிக்க மிஷனரி

எனினும் இலங்கையில் கல்விக்காக பாரியளவில் பணியாற்றிய பெருமை ஆணைக்குழுக்களையே சாரும்.

  1. 1833 கோல்புறூக் ஆணைக்குழு
  2. 1841 மெக்ன்ஸி ஆணைக்குழு
  3. 1865 மோர்கன் ஆணைக்குழு
  4. 1920 மனிங் சீர்திருத்த யோசனைகள்
  5. 1931 டொனமூர் சீர்திருத்த யோசனைகள்

1.1833 கோல்புறூக் ஆணைக்குழு

  • அரசாங்க பாடசாலைகளின் நிர்வாகத்திற்காக பாடசாலை ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
  • ஆங்கில மொழி மூலப் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டன.
  • ஆங்கில மொழியை கட்டாய மொழியாக்கல்.
  • ஆங்கிலத்தை கற்பதற்காக கொழும்பில் வித்தியாலயம் ஒன்று அமைத்தல்.
  • கிறிஸ்தவ மிஷனரிக் கல்விக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்குதல் இது தொடர்பாக மிஷனரி பாடசாலைகள் உள்ள பிரதேசங்களில் அரசாங்க பாடசாலைகளை ஏற்படுத்தல்.

2. 1841 ஆம் ஆண்டு மெக்ன்ஸி ஆணைகுழு

  • கோல்புறூக் ஆணைக்குழு சிபாரிசு உருவாக்கப்பட்ட கல்வி ஆணைக்குழு வெற்றியாளிக்காமையால் மத்திய பாடசாலை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
  • சுயமொழி பாடசாலைகளும் மும்மொழி பாடசாலைகளும் உருவாக்கப்பட்டன.
  • உதவி நன்கொடை பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.
  • மத்திய பாடசாலை முறைமை உருவாக்கப்பட்டது.
  • முக்கிய நகரங்களில் பெண்கள் பாடசாலை உருவாக்கப்பட்டது.
  • ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு பாடசாலைகள் அமைக்கபட்டன. பிற்காலத்தில் இவைகளில் மும்மொழிகளும் பயிற்சியளிக்கப்பட்டது.
  • தேசிய பரீட்சைகள் நடாத்தபட்டன.
  • கொழும்பு அகடமி எனும் பெயரில் உயர் தொழிலுக்கான மாணவர்களை பயிற்சியளிக்கும் நிலைமொன்று உருவாக்கபட்டது. இது பிற்காலத்தில் கொழும்பு றோயல் கல்லூரி எனப்பட்டது.

3. 1865 ஆம் ஆண்டு மோர்கன் ஆணைக்குழு

  • கல்வி நிர்வாகத்திற்காக கற்பித்தல் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டமை.
  • கல்வி நடவடிக்கைகளின் நிர்வாகம் அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டமை.
  • தாய்மொழியில் ஆரம்ப கல்வியை வழங்கல், இடைநிலை, உயர்நிலை கல்வியை ஆங்கில மொழியில் கற்பித்தலை மேற்கொள்ளல்.
  • பெண்கள் கல்வியை மேம்படுத்தல், பெண்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படாமை, பாடசாலைக்கு சமூகளிக்கும் பெண்களுக்கு பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கபட்டது.
  • தனியார் பாடசாலைகளுக்கு உதவி வழங்கல்
  • மோர்கன் அறிக்கையில் பாடசாலைகள் பல வகைப்படுத்தப்பட்டு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
  1. தொழிற் பாடசாலைகள்
  2. மும்மொழி பாடசாலைகள்
  3. மத்திய பாடசாலை
  4. கொழும்பு அகடமி
  5. ஆசிரியர் பயிற்சி பாடசாலை

4. 1920 மனிங் சீர்திருத்த யோசனைகள்

  • கல்வி திணைகளத்தையும் கல்வி சபையையும் சட்டபூர்மாக்கியதன் மூலம் மத்திய நிர்வாகம் ஒன்று உருவாக்கப்பட்டது.
  • கல்வி வேலைத்திட்டங்களை மாவட்டக் குழுக்களிடம் ஒப்படைத்தல்.
  • சமய பிரிவுகளால் பாடசாலைகள் அமைக்கப்படாத இடங்களில் அரசாங்கம் பாடசாலைகளை ஆரம்பித்தல்.
  • முறையான தோட்ட பாடசாலைகள் உருவாக்கல்.
  • பாடசாலை செல்வதை கட்டாயமாக்கல்.
  • அரசாங்க பாடசாலைகளில் சமய போதனைகள் தடுக்கப்பட்டமை.

5. 1931 டொனமூர் சீர்திருத்த யோசனைகள்

  • தேசிய தன்மையுடனான கல்வியை வழங்கல்
  • கட்டாயக் கல்வி முறை
  • பாலர் வகுப்பு முதல் பல்கலைகழகம் வரை இலவசக் கல்வி முறை அறிமுகம்
  • கிராமியக் கல்வி முறையை மேம்படுத்துவதற்கு ஹந்தெஸ்ஸ யோசனைகள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது
  • பாடசாலைகளுக்கு மதிய உணவை வழங்கல்
  • தேசிய பரீட்சைகள் முறை ஆரம்பம்
  • இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தை ஆக்கல்
  • பாடசாலையில் சமயத்தை கட்டாய பாடமாக்கல்
  • ஆசிரியர் பயிற்சிகாக விஷேட அமைப்புகளை உருவாக்கல்
  • ஆசிரியர்களின் சம்பளத்தை திணைக்களத்தால் நேரடியாக வழங்குவதற்க்கான முறை ஒன்றை ஆரம்பித்தல்
  • மத்திய பாடசாலை ஆரம்பித்தல்
  • கிராமிய மாணவர்களில் திறமைமிக்க ஏழை பிள்ளைகளுக்கு உயர் கல்வி பெற்றுக் கொடுப்பதற்கு ஐந்தாம் தர உபகார நிதி வழங்கும் முறை

உயர் கல்வி துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகள்

  • 1830 – கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக பரீட்சை இலங்கையில் நடைபெறல்
  • 1870 – வைத்திய கல்லூரி
  • 1873 – சட்டக் கல்லூரி
  • 1893- தொழில்நுட்ப கல்லூரி
  • 1889 – ஆங்கில ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • 1903 – ஆசிரியர் பயிற்சி கல்லூரி
  • 1906 – இலங்கை பல்கலைக்கழக சங்கம் நிறுவப்பட்டது.
  • 1911 – பல்கலைக்கழகம் அமைப்பது பற்றிய பிறிட்ஜெஸ் விசாரணைக்குழு
  • பல்கலைகழக கல்லூரியை சிபாரிசு செய்தமை
  • 1912 – ஆணைக்குழு பல்கலைக்கழகம் நிறுவ சிபாரிசு செய்தது.
  • 1921 – இலங்கை பல்கலைக்கழக கல்லூரி கொழும்பில் ஆரம்பமானது.
  • 1928 – பேராதனை பல்கலைக்கழகம் கண்டியில் ஆரம்பமானது.
  • 1957 – காலி தொழிநுட்பக் கல்லூரி
  • 1959 – வித்தியோதய, வித்தியலங்கார, பீடங்கள் பல்கலைக் கழகம் ஆகுதல்
  • 1960 – பேராதனை பல்கலைகழக மாணவர் அனுமதி
  • 1963 – கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடம்
  • 1966 – உயர்கல்வி சட்டமூலம் உயர்கல்வி தேசிய குழு
  • 1967 – கொழுப்பு பல்கலைகழகம்
  • 1972 – கட்டுப் பெத்த உயர் தொழில்நுட்பக் கல்லூரி
  • 1974 – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  • 1975 – வேளாண்மை, பாளி, பெளத்த ஆய்வு நிலையங்கள்
  • 1978 – உயர்கல்வி அமைச்சு உருவாக்கப்படல்
  • 1980 – திறந்த பல்கலைக்கழகம்
  • 1984 – மாத்தறை றுகுணு பல்கலைக்கழகம்
  • 1986 – கிழக்கு பல்கலைக்கழகம்
  • 1995 – பெலிகல் ஓயா சப்ரகமுவ பல்கலைக்கழகம்
  • 1995 – ரஜரட்ட பல்கலைக்கழகம்
  • 1996 – தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
  • 1999 – வயம்ப பல்கலைக்கழகம்
  • 2005 – ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

கல்வி தொடர்பாக ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள்.

  • 1945 – இலவச கல்வி திட்டம் அறிமுகம்
  • 1952 – புலமைப்பரிசில் திட்டம்
  • 1960 – பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டன.
  • 1980 – இலவச பாடநூல் விநியோகம்
  • 1989 – இலவச மதிய உணவுத் திட்டம் ஆரம்பமானது
  • 1993 – இலவச சீருடை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

இந்த அம்சங்கள் இலங்கை கல்வி வரலாற்றில் பல்வேறு புதிய போக்குகள் உருவாகக் காரணமாயிற்று. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு முதலான தளங்களில் ‘கல்வி’ ஏற்படுத்தி வந்த மாற்றங்கள் விரிவானவை.

இதைவிட கல்வித்துறையில் அவ்வப்பொழுது ஏற்படுத்தப்பட்ட ‘சீர்திருத்தங்கள்’, சமூக மட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்களும் அதிகம் என்றே கூறலாம்.

ZEENA NAFEES
B.A SPECIAL IN GEOGRAPHY ®️
SEUSL.

இலங்கையில் ஆரம்ப காலத்தில் எழுத்துக்களின் அறிமுகம் பிராமிய மொழியில் தொடங்கி அனுராதபுர காலத்திலிருந்தே வளர்ச்சி அடைந்து சென்றதை வரலாற்று மூலாதாரங்களின் மூலம் அறிலாம். அது பின்னர் 1515 இல் இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கேயர், 1638…

இலங்கையில் ஆரம்ப காலத்தில் எழுத்துக்களின் அறிமுகம் பிராமிய மொழியில் தொடங்கி அனுராதபுர காலத்திலிருந்தே வளர்ச்சி அடைந்து சென்றதை வரலாற்று மூலாதாரங்களின் மூலம் அறிலாம். அது பின்னர் 1515 இல் இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கேயர், 1638…