நல்லாட்சியிலும் நடைமுறையாட்சிலும் பெற்றோலிய விலைச்சூத்திரம்

கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நேற்றிரவு எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மங்களா சமரவீர அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் 2018.12.19 ஆம் திகதி பயன்படுத்தப்பட்ட பெற்றோலிய விலைச் சூத்திரத்தை தனது டீவிட் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்.

அந்த விலைச்சூத்திரமானது – MRP = V1 + V2+ V3+ V4 என மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

MRP எனும் Maximum Retail Price நான்கு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

V1 என்றால் துறைமுகத்தில் இறக்கும் செலவு எனவும், ஒரு பீப்பாய்க்கு செலவாகும் சிங்கப்பூர் விலையும் ஆவியாதல் மற்றும் ரூபாவின் பெறுமதியும் இதன்போது கவனத்திற்கொள்ளப்படுகிறது.

V2 என்றால் உற்பத்தி செலவு (உள்நாட்டு துறைமுகக் கட்டணம், துறைமுகத்திற்கு கொண்டுவரப்படுகின்றபோது ஏற்படுகின்ற விரையம், சந்தை முகவரின் மானியம், களஞ்சிய செலவு ஆகியனவும் அடங்கும்)

V3 என்றால் நிர்வாக செலவு (ஊழியர் கொடுப்பனவு உள்ளிட்ட நிர்வாக செலவு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றமை உள்ளிட்ட ஏனைய செலவுகளும் உள்ளடங்கும்).

V4 என்றால் வரிச் செலவு (சுங்க வரி, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேச நிர்மாண வரி ஆகிய வரிகள் அடங்கும்)

அதற்கமைய,

பெட்ரோல்
– ஒக்டேன் 92 –  ரூ. 124.52
– ஒக்டேன் 95 –  ரூ. 149.02

டீசல்
– ஒட்டோ டீசல் –  ரூ. 101.14
– சுப்பர் டீசல் – ரூ.  120.11

இற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்றிரவு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

பெட்ரோல் ஒக்டேன் 92 – ரூ. 20 இனால்  அதிகரித்து ரூ. 157 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒக்டேன் 95 – ரூ. 23 இனால் அதிகரித்து  ரூ. 184 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

டீசல் ஒட்டோ டீசல் – ரூ. 7 இனால்  அதிகரித்து ரூ. 111 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது. சுப்பர் டீசல் – ரூ. 12 இனால் அதிகரித்து ரூ. 144 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது. மண்ணெண்ணெய் -ரூ. 7 இனால் அதிகரித்து  ரூ. 77 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேற்படி விலையதிகரிப்பை நடைமுறையாட்சி வெற்றி பெற உதவிய 69 இலட்ச வாக்காளர்களுடன் தொடர்படுத்தி சில மீம்ஸ் தயாரிப்பாளர்கள் பெற்றோலிய விலைக்கான புதிய சூத்திரத்ததை 69 = LP92+LP95+D+SD+K என்று உருவாக்கியுள்ளனர்.

அதிகரிக்கப்பபெற்ற பெறுமானங்களை அவதானித்தால், 20, 23, 07, 12, 07 என அதன் கூட்டுத்தொகை 69 என்பது குறிப்பிடத்தக்கது.

அது அரசியல் சார்ந்த பதிவாக இருந்தாலும் அறிவியல் சார்ந்த பதிவொன்றை இப்ஹாம் அஸ்லமின் முகநூலில் அவதானிக்க முடிந்தது.

நியுற்றனின் பெற்றோல் விலை அதிகரிப்பு விதி!

கொரோனா பரவலானது பெற்றோல் விலை அதிகரிப்புக்கு நேர்மாறுவிகித சமனாகும்! அதாவது, விலை அதிகரிக்கும் போது கொரோனா பரவல் குறையும்

விளக்கம்: பெட்ரோல் விலை அதிகரித்தால், பெட்ரோல் அடிப்பதை குறைப்பாங்க, அப்போ ஊர் சுற்றுவதை குறைப்பாங்க, அப்படின்னா, கொரோனா பரவல் குறையும்’ல

伊卜努阿萨德