நாட்டில் 83% மரணங்கள் தொற்றா நோய்கள் மூலம் – தொற்றா நோய்கள் தொடர்பான தேசிய கவுன்சில்

  • 6
இதயம், புற்று, நீரிழிவு, சிறுநீரகம் போன்ற  நோய்கள்

இந்த நாட்டில் நிகழும் மரணங்களில் 83% மரணங்கள் இதய நோய், புற்றுநோய்,எ நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்ற பிரதான தொற்று நோய் அல்லாத (தொற்றா) நோய்கள் காரணமாக ஏற்படும் என்று நேற்று (16.06.2021 சுகாதாரஅமைச்சில் கூடியிருந்த தொற்றா நோய்கள் தொடர்பான தேசிய கவுன்சிலில் வெளிப்படுத்தப்பட்டது.

அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் தலைமையில் கூடிய கவுன்சிலில், அவ்வாறான தொற்றா நோய்கள் கட்டுப்படுத்த கொள்கை சார் முடிவுகளை எடுப்பதில் தான் முன்னிலை வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டது.

அதன்படி, இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் மன நோய் போன்ற தொற்றுநோயற்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் எதிர்கால நடவடிக்கைகளை அமுல்படுத்துதல், திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

எதிர்காலத்தில் தொற்றா நோய் உள்ளவர்களின’ பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுகாதார அமைச்சினால் தொடங்கப்படவுள்ள நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டங்களை விரைவுபடுத்தவும், இந்த சேவைகளை மிகவும் திறமையாகவும், நெறிப்படுத்தவும் பொருத்தமான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொற்றா நோய்களுக்கான தேசிய கவுன்சில் 2017 இல் நிறுவப்பட்டது மற்றும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை கூடி, தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்கிறது. இது  அமைச்சரினால் தலைமையில் இடம்பெறுகின்றது.

அமைச்சர்கள் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொடர்புடைய அதிகாரிகளும் ஸூம் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதயம், புற்று, நீரிழிவு, சிறுநீரகம் போன்ற  நோய்கள் இந்த நாட்டில் நிகழும் மரணங்களில் 83% மரணங்கள் இதய நோய், புற்றுநோய்,எ நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்ற பிரதான தொற்று நோய் அல்லாத (தொற்றா)…

இதயம், புற்று, நீரிழிவு, சிறுநீரகம் போன்ற  நோய்கள் இந்த நாட்டில் நிகழும் மரணங்களில் 83% மரணங்கள் இதய நோய், புற்றுநோய்,எ நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்ற பிரதான தொற்று நோய் அல்லாத (தொற்றா)…