எம்.பிக்களின் வாகன இறக்குமதி விவகாரம் – எதிராக ஜே.வி.பி அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

  • 3

பிரதிவாதிகளாக பிரதமர் உட்பட பலர்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினர் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளருமான மஹிந்த ஜயசிங்கவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று நாடளாவிய ரீதியில் வியாபித்து, பொருளாதாரம் கடுமையான மந்தநிலையில் இருக்கும் நேரத்தில், மக்கள் துன்பங்களை எதிர்நோக்கியுள்ள நிலையிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 227 சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம், இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி, மனுதாரர் தமது மனுவில் கோரியுள்ளார்.

இம்மனுவின் பிரதிவாதிகளாக நிதியுமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, நிதியமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை உறுப்பினர்கள், சுங்க பணிப்பாளர் நாயகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தீர்மானத்தை இடைநிறுத்த, கடந்த மே 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டாலும், அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக ஏற்கனவே இலங்கை வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ள கடனீட்டு ஆவணங்கள் காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளாதாக, மனுதாரர் தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் கடுமையான பேரழிவை எதிர்கொள்ளும் நேரத்தில் மக்கள் செலவில் இத்தகைய ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது எனவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயல் எனவும் தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர் தமது மனுவில் கோரியுள்ளார்.

அத்துடன், சம்பந்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கச் செய்து முழுமையான விசாரணைகளை நடத்துமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை வங்கி வழங்கிய அனைத்து கடனீட்டு ஆவணங்களையும், அந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளையும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் தங்களது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அதையும் மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமாயின் அவ்வாகனங்களை பொது ஏலத்தில் விற்று அதை திறைசேரியிடம் ஒப்படைக்க நிதியமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமெனவும் மனுதாரர்கள் தமது மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதிவாதிகளாக பிரதமர் உட்பட பலர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர் மேல் மாகாண சபையின் முன்னாள்…

பிரதிவாதிகளாக பிரதமர் உட்பட பலர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர் மேல் மாகாண சபையின் முன்னாள்…