இராணுவத்தின் இழிவான தண்டனை – அம்பிகா சற்குணநாதன்

  • 10

இன்று ஏறாவூர் பொது மக்களை முழங்காலில் இருக்க வைத்த  சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இராணுவத்தின் இழிவான தண்டனை எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் நடமாடியவர்களை இராணுவத்தினர் பிடித்து தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்த சம்பவம் மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று (19.06.2021) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட வண்ணமுள்ளது.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது கருத்ததொன்றை ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

இராணுவத்தால் வழங்கப்பட்ட இந்த “தண்டனை” இழிவான சிகிச்சை அல்லது தண்டனையாக இருக்கலாம். இலங்கைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனையை தடை செய்கிறது. சித்திரவதைக்கு எதிரான சட்டத்தின் கீழ் இது ஒரு குற்றமாகும் என்று தெரிவித்துள்ளார். LNN Staff

இன்று ஏறாவூர் பொது மக்களை முழங்காலில் இருக்க வைத்த  சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இராணுவத்தின் இழிவான தண்டனை எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை…