நீ ஓர் அடையாளம்

  • 12

உயிர்களை துச்சமென
உதறும் யுத்த பூமியில்
கல்வி எனும்
ஆயுதம் ஏந்தி
அமைதி காண
விரும்பும் பெண்ணே!

எழுதுகோல் கொண்டு
தேசத்தின் தலையெழுத்தை
மாற்ற துணிந்திருக்கும்
வீரத்தாய் நீ!

உபயோகமில்லாத
சில்லறை காரணங்களுக்காக
கல்வியை கைவிடும்
அத்தனை மங்கையர்களுக்கும்
உன் செயல் ஓர்
எடுத்துக்காட்டு!

அழிந்து போகும்
அத்தனையும்
அழியாச் செல்வம்
கல்வியைத் தவிர
என்பதை மீண்டும் ஒருமுறை
உன்னில் உணர்ந்து
கொண்டோம்!

நீ
கல்வியோடு
பயணித்தால்
பணம் புகழ்
பதவி பட்டம்
அத்தனையும்
உன்னோடு பயணிக்கும்!

திருமணம்
பண்பாடு கலாசாரம்
சமூக கட்டுப்பாடு
என முடக்கப்படும்
இளம் பெண்களின்
இளமைக் கல்வி
அத்தனையும் தகர்த்து
மழலையுடன் இணைந்து
தொடர துணிந்திருக்கும்
நீ ஓர் முன்மாதிரி!

கல்வியோடு கைக்கோர்த்து
கல்லாமையை கரையொதுக்கி
கனவுகளை நிஜமாக்கி
வரலாற்றில் பெயர்
பதிப்போம் பெண்னே!

தடைகளை உடைத்து
கல்வியை தொடரும்
அத்தனைப் பேருக்கும்
நீ ஓர் அடையாளம்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka

உயிர்களை துச்சமென உதறும் யுத்த பூமியில் கல்வி எனும் ஆயுதம் ஏந்தி அமைதி காண விரும்பும் பெண்ணே! எழுதுகோல் கொண்டு தேசத்தின் தலையெழுத்தை மாற்ற துணிந்திருக்கும் வீரத்தாய் நீ! உபயோகமில்லாத சில்லறை காரணங்களுக்காக கல்வியை…