எந்தன் அன்புத் தந்தைக்கு

  • 22

எந்தன் அன்புத் தந்தைக்கு
அவனியில் பிறந்ததனால்
அளவில்லா அன்பைத் தருகிறேன்!

எந்தன் அன்புத் தந்தைக்கு
ஆயுள் மென்மேலும் நீண்டிட
ஆண்டவன் அருளை வேண்டுகின்றேன்!

எந்தன் அன்புத் தந்தைக்கு
ஆனந்தம் வாழ்வில் பெருகிட
உளமார்ந்த வாழ்த்துகள் பாடுகின்றேன்!

எந்தன் அன்புத் தந்தைக்கு
எனை நல்ல ஆளுமையாக்கியதற்கு
ஆயுள் முழுதும் பிரார்த்திக்கின்றேன்!

நல்ல ஆசானாய் அதிபராய்
பதவியில் ஓய்வு பெற்றே
சமாதான நீதிவானாய்
சமூக சேவை தொடர்ந்தே
எண்ணங்களையும் எழுத்துக்களையும்
பொன்வண்ணமாக்கிய
என் உயிர்த் தந்தை
அல்-ஹாஜ் ஏ.ஸீ.செய்யது
அஹமது அவர்களே என்பதில்
பெரிதும் அகமகிழ்கின்றேன்!

தான் பசித்து எமைப் புசிக்க
எம்மைக் கல்விக் கரையேற்ற
எண்ணற்ற அர்ப்பணிப்புகள்
உங்கள் வாழ்வில் எங்களுக்காய்!

தவறு செய்யும் போது
சில பொழுதுகளில்
அழகிய தண்டிப்பு!
பல பொழுதுகளில்
அன்பான கண்டிப்பு
எல்லாமே பட்டை தீட்டி
மின்னும் மாணிக்கமாக்கியது!

எந்தன் அன்புத் தந்தையே
எனது முதல் காதல்!
அதுவே முடிவிலாக் காதலும்!
உங்கள் ஆயுள் நீண்டிட
மன அமைதி பெற்றிட
ஆரோக்கியம் பெருகிட
வல்லோனிடம் வேண்டுகிறேன்!

எந்தன் அன்புத் தந்தையே
எந்தன் கவிதையை
சமர்ப்பிக்கிறேன் உங்களுக்காக!

அன்பு மகள்
எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
பஸ்யால
20/06/2021

 

எந்தன் அன்புத் தந்தைக்கு அவனியில் பிறந்ததனால் அளவில்லா அன்பைத் தருகிறேன்! எந்தன் அன்புத் தந்தைக்கு ஆயுள் மென்மேலும் நீண்டிட ஆண்டவன் அருளை வேண்டுகின்றேன்! எந்தன் அன்புத் தந்தைக்கு ஆனந்தம் வாழ்வில் பெருகிட உளமார்ந்த வாழ்த்துகள்…

எந்தன் அன்புத் தந்தைக்கு அவனியில் பிறந்ததனால் அளவில்லா அன்பைத் தருகிறேன்! எந்தன் அன்புத் தந்தைக்கு ஆயுள் மென்மேலும் நீண்டிட ஆண்டவன் அருளை வேண்டுகின்றேன்! எந்தன் அன்புத் தந்தைக்கு ஆனந்தம் வாழ்வில் பெருகிட உளமார்ந்த வாழ்த்துகள்…