ஈஸ்டர் தாக்குதல் – 32 சந்தேக நபர்கள் தொடர்பில் ஒன்பது வழக்குகள் சட்ட மாஅதிபரினால் தாக்கல்

  • 9

லோரன்ஸ் செல்வநாயகம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்பான 32 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மாஅதிபரினால் 09 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒன்பது சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் எட்டு சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவாக அதற்கான வழக்குகள் தாக்கல் செய்யப்படுமென்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 17 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவும் முன்னெடுத்து வருகின்றன.

மேற்படி விசாரணைகளில் 9 சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட 32 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மாஅதிபரினால் கேகாலை, கண்டி குருணாகல்,புத்தளம் மற்றும் கொழும்பு நீதிமன்றங்களில் 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 8 சம்பவங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்காக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள், குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவாக வழக்கு தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்பான 32 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மாஅதிபரினால் 09 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஒன்பது சம்பவங்கள் தொடர்பில்…

லோரன்ஸ் செல்வநாயகம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்பான 32 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மாஅதிபரினால் 09 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஒன்பது சம்பவங்கள் தொடர்பில்…