வறுமைச் சுழி

  • 15

பத்துப் பாத்திரம் தேய்ச்சித் தானே
நித்தம் எந்தன் காலம் போச்சி

லாக்டவுன் ஆன நொடி
எனக்கோ பேரிடி

வேலை தேடிப் போக முடியல்ல
என் குடிசையில் நெடுநாள் அடுப்பு எரியல்ல

ஊண் இன்றி தவிப்பு ஒருபக்கம்
போன் இன்றி பிள்ளை படிப்பு மறுபக்கம்.

பக்கத்து வீட்டுப் பலாமரம்
பல நாட்களாய் எனக்குப் பெரும் வரம்

அமுதசுரபியாய் தண்ணீர் பாத்திரம்
துணையெனக்கு கண்ணீர் மாத்திரம்.

திரும்பிடும் திசையெல்லாம் தனிமை
திரும்பி வருமா எம் வாழ்வில் இனிமை

விடிகின்ற பொழுதெல்லாம்
விழிகளில் கங்கை
முடியுமோ இந்தக் கோரம்
ஏந்துகிறேன் என் இரு கை.

மக்கொனையூராள்

பத்துப் பாத்திரம் தேய்ச்சித் தானே நித்தம் எந்தன் காலம் போச்சி லாக்டவுன் ஆன நொடி எனக்கோ பேரிடி வேலை தேடிப் போக முடியல்ல என் குடிசையில் நெடுநாள் அடுப்பு எரியல்ல ஊண் இன்றி தவிப்பு…

பத்துப் பாத்திரம் தேய்ச்சித் தானே நித்தம் எந்தன் காலம் போச்சி லாக்டவுன் ஆன நொடி எனக்கோ பேரிடி வேலை தேடிப் போக முடியல்ல என் குடிசையில் நெடுநாள் அடுப்பு எரியல்ல ஊண் இன்றி தவிப்பு…