நிறைவேற்றதிகாரம் தீமைகளின் நீருற்று – மங்கள சமரவீர

  • 8

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது பாதகங்களுக்கு மூல காரணம் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சர்வதேச மற்றும் உள்ளக அரசியலில் துமிந்த சில்வா விடுதலை பேசுபொருளாக உள்ள தருணத்தில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

1978 ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நிறுவப்பட்டதிலிருந்து இந்த நாட்டில் பெரும்பாலான பாதகங்களுக்கு அது மூல கர்த்தாவாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நவீன ஜனநாயகமாக நாம் இருக்க வேண்டுமென்றால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 பேர் விடிதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுள் ஒருவராக  முன்னாள் எம்.பி.யும் ஹிருணிகா பிரேமசந்திரவின் தந்தையுமான பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரன் கொலைச் சம்பவம் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது பாதகங்களுக்கு மூல காரணம் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும் உள்ளக அரசியலில் துமிந்த சில்வா விடுதலை பேசுபொருளாக உள்ள தருணத்தில் முன்னாள் அமைச்சர் மங்கள…

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது பாதகங்களுக்கு மூல காரணம் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும் உள்ளக அரசியலில் துமிந்த சில்வா விடுதலை பேசுபொருளாக உள்ள தருணத்தில் முன்னாள் அமைச்சர் மங்கள…