“Peace Through Understanding” தொனிப்பொருளில் SEUSL பல்கலைக்கழக 2016/2017ம் கல்வியாண்டின் முதலாம் வருட நிறைவு விழா

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட 2016/2017 ஆம் கல்வியாண்டின் மாணவ மாணவிகளால் முதலாம் வருட நிறைவைக் கொண்டாடுவதற்காக சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக “Peace Through Understanding” எனும் தொனிப்பொருளின் கீழ் ஓர் நிகழ்வை ஏற்பாடு செய்தது.

இந் நிகழ்வை முன்னிட்டு பல்கலைக் கழக cultural center ஐ மையப்படுத்தியதான சிரமதான நிகழ்வொன்று 14.01.2019 ஆம் திகதி மாலை 4:00 மணியளவில் ஏற்பாடு செய்து நாடாத்தப்பட்டது.
இச் சிரமதான நிகழ்வைத் தொடர்ந்து இன்று 2019/01/15 முதலாம் வருட நிறைவுதின நிகழ்வில், மஸ்ஜிதில் நடைபெறும் சமயக் கிரியைகள் தொடர்பான செயல்முறைகள் தொடர்பான விளக்கம் சகோதர இன மாணவ நண்பர்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வு ஆண்களுக்கு cultural center இன் கீழ்மாடியிலும், பெண்களுக்கு cultural center இன் மேல்மாடியிலும் நடைபெற்றது.
மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சகோதர இனத்தவர்களுக்கும் குளிர்பானம், பேரீத்தம் பழம், கற்கண்டு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து முஸ்லிம் அல்லாத சகோதரிகளுக்கும் இலவசமாக மருதாணி இடப்பட்டது என்பதையும், வருகை தரும் அனைத்து சகோதர இனத்தவர்களுக்கும்
அரபு எழுத்தணி மூலம் தங்களது பெயர்கள் பதிக்கப்பட்ட bookmark வழங்கப்பட்டது. என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
இந்நிகழ்வுகள் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட 2016/2017 ஆம் கல்வியாண்டின் மாணவ மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

Nafees Naleer

(irfani)

SEUSL

Author: admin

422 thoughts on ““Peace Through Understanding” தொனிப்பொருளில் SEUSL பல்கலைக்கழக 2016/2017ம் கல்வியாண்டின் முதலாம் வருட நிறைவு விழா

  1. மாஷா அல்லாஹ் உங்களது நல்ல எண்ணங்கள் மேலோங்கட்டும்

Comments are closed.