எக்ஸ் பிரஸ் பெர்ல் கப்பல் நிறுவனத்தால் ரூ. 720 மில். இடைக்கால நஷ்டஈடு

  • 9

மே 20 – ஜூன் 03 வரை ரூ. 8,000 மில்லியன் நஷ்டஈட்டுக் கோரிக்கை
பாதிப்பை ஆராய இந்திய கப்பல் இலங்கை வருகை

இலங்கைக் கடலில் தீப்பிடித்த எக்ஸ் பிரஸ் பெர்ல் கப்பல் காரணமாக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கான இடைக்கால இழப்பீடாக சுமார் ரூ. 720 மில்லியனை செலுத்த குறித்த கப்பல் நிறுவனம் இணங்கியுள்ளது.

இது தொடர்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக, மீனவர்களுக்கான இடைக்கால நஷ்டஈடாக, 3.6 மில்லியன் டொலரை செலுத்த குறித்த கப்பலின் முகவர்களால் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளதாக, மீன்பிடித் துறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

முழு இழப்பீடு வழங்கப்படும் வரை குறித்த இடைக்கால நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதோடு, மே 20 முதல் ஜூன் 03 வரையான காலப் பகுதிக்கான இழப்பீடாக, சட்ட மாஅதிபரினால் மொத்தமாக 40 மில்லியன் டொலர் (ரூ. 8000 மில்லியன்/ ரூ. 800 கோடி) இழப்பீடு கோரப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த இழப்பீடு, அக்கப்பலின் காப்புறுதி நிறுவனத்தினால் செலுத்தப்படவுள்ளதாக, நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த கப்பலால் கடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய, விசேட கப்பலொன்று இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இக்கப்பல் நேற்று (25) நாட்டுக்கு வந்ததோடு, நீர்கொழும்பிலிருந்து பாணந்துறை வரையிலான கடல் பகுதியின் மேற்பரப்பு மற்றும் உட்புறத்தை இன்று (26) முதல் ஒரு வாரத்திற்கு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த பணியில் இலங்கை கடற்படையும் இணைந்து மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே 20 – ஜூன் 03 வரை ரூ. 8,000 மில்லியன் நஷ்டஈட்டுக் கோரிக்கை பாதிப்பை ஆராய இந்திய கப்பல் இலங்கை வருகை இலங்கைக் கடலில் தீப்பிடித்த எக்ஸ் பிரஸ் பெர்ல் கப்பல் காரணமாக…

மே 20 – ஜூன் 03 வரை ரூ. 8,000 மில்லியன் நஷ்டஈட்டுக் கோரிக்கை பாதிப்பை ஆராய இந்திய கப்பல் இலங்கை வருகை இலங்கைக் கடலில் தீப்பிடித்த எக்ஸ் பிரஸ் பெர்ல் கப்பல் காரணமாக…