அன்றாட வாழ்வில் மலாய் மொழியின் பயன்பாடு

  • 9

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பண்டை தொட்டு பல ஊர்களிலும் குடி கொண்டு வாழும் மலாய் இன முஸ்லிம் மக்கள், மிகவும் பாரம்பரிய கலை கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். இவர்கள் பேசும் சுந்தர மலாய் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லாத போதும், ஆங்கில எழுத்துக்களையே மலாய் மொழியின் எழுத்துக்களாக உபயோகித்து வருகிறார்கள்.

இருந்தாலும் இந்த மொழியின் தாக்கம் இன்று இலங்கையில் பேசப்படும் எல்லா மொழிகளிலும் ஊடுருவி உள்ளது என்பதனை பலரும் அறியாத விடயமாகவே இருந்து வருகிறது.

இலங்கையில் மலாயர் மாத்திரம் அல்ல எல்லா இனத்தவரும் மலாய் சொற்களில் பெரும்பாலானவற்றை தமது அன்றாட வாழ்க்கையில் அவர்களை அறியாமலேயே பிரயோகித்து வருகிறார்கள். இது நீரு பூத்த நெருப்பாய் மறைந்து கிடக்கும் ஒரு உண்மை ஆகும்.

நாம் பேசும் தாய் மொழிக்கும் இச்சொற்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை முஸ்லிம்களாகிய நாம் மாத்திரம் அல்ல எல்லா இனத்தவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.

அவற்றுள் நாட்டில் அன்றாடம் பாவனையில் இருந்து வரும் ஒரு சில மலாய் சொற்களை பார்ப்போம்.

தூரியங்கா= டூரி என்றால் மலாய் மொழியில் முள் என்பதாகும். முற்களால் சூழப்பட்ட பழத்தை தான் நாம் தூரியங்கா என்று அழைக்கிறோம்.

ரம்புட்டான்= ராம்புத் என்றால் மலாய் மொழியில் மயிர் என்று பொருள் மயிர் போன்ற நார்களால் சூழப்பட்ட பழத்தை தான் நாம் ரம்புட்டான் என்கிறோம்.

மெங்கூஸ்= மெங்கூஸ்என்பதும் மலாய் மொழியில் இருந்து வந்ததாகும். இவை மலாய் தேசத்தின் பிரசித்தமான பல வர்க்கங்கள். எனவே தான் அந்த சொற்களை இங்கும் எங்கும் பாவனை செய்து வருகிறார்கள்.

நசிகோரெங்= நாசி என்றால் சோறு கோரெங் என்றால் வறுத்தல் எனப் பொருள்படும். வறுத்தெடுக்கப்பட்ட சோற்றை தான் நாசிகோரெங் என்று ரசித்து , ருசித்து அர்த்தம் புரியாமல் சாப்பிடுகிறோம்.

ஊபர்= ஊபர் என்றால் மலாய் மொழியில் செலுத்து , ஓட்டு என்று பொருள்படும். Uber முதலில் மலாய் தேசத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மலாய் மொழியை தான் இலங்கையில் இன்று எல்லா இனத்தவரும் ஊபர்…ஊபர் என்று ஓட்டி வருகிறார்கள்.

இது இப்படி இருக்க சாப்பாடு வகைகளை எடுத்துக் கொண்டால் , கலியாண வீடுகளிலும் விருந்து உபசாரங்களிலும் , ஏன் பெரிய பெரிய ஹோட்டல்களிலும் கூட விசேட இடத்தை பிடித்து வரும் ஒரு item தான் “மெலே அச்சார்”. புரியாணி உட்பட எல்லா சாப்பாடு வகைகளுக்கும் இது இன்றியமையாத Rice puller ஆக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா இனத்தவராலும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த மெலெ அச்சாரும் மலாய் தேசத்திலிருந்து வந்த உணவு வகை தான் என்பதை நாம் மறக்கலாகாது.

ஏன், பாபத் கொடல் மணிப்புட்டு என்று சொல்லும் போதே வாயின் ஜலம் ஊர்கிறது அல்லவா? இந்த உணவு வகையை அறிமுகம் செய்து வைத்ததும் மலாயர்கள் என்பதை நாம் நினைவு கூற வேண்டும். இப்படியாக இலங்கை வாழ் எல்லா சமூக மக்களும் தெரிந்தோ தெரியாமலோ மலாய் மொழி சொற்களை பிரயோகிக்கிறார்கள் , மலாய் உணவு வகைகளை உண்டு வருகிறார்கள் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை

இன்ஷா அல்லாஹ் மேற்கொண்டு மலாய் சமூகத்தினரை பற்றிய இன்னும் தகவல்களை திரட்டித்தர எண்ணி இருக்கிறேன். அதற்கான வாய்ப்பை சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ் தர வேண்டும் என வேண்டிக் கொண்டு விடைபெருகிறேன்.

நியாஸ் மூசின்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பண்டை தொட்டு பல ஊர்களிலும் குடி கொண்டு வாழும் மலாய் இன முஸ்லிம் மக்கள், மிகவும் பாரம்பரிய கலை கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். இவர்கள் பேசும் சுந்தர மலாய் மொழிக்கு எழுத்து வடிவம்…

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பண்டை தொட்டு பல ஊர்களிலும் குடி கொண்டு வாழும் மலாய் இன முஸ்லிம் மக்கள், மிகவும் பாரம்பரிய கலை கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். இவர்கள் பேசும் சுந்தர மலாய் மொழிக்கு எழுத்து வடிவம்…