சாரா எங்கே? – அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாமல் தடமாறும் விசாரணையாளர்கள்

  • 6

எம்.எப்.எம்.பஸீர்

புலஸ்­தினி மகேந்­திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள ஒரு பெண். நீர்­கொ­ழும்பு – கட்­டு­வ­ாபிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது விடை காணப்­ப­டாத கேள்­வி­யாக தொடர்­கி­றது.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்­துக்­கொண்ட தேசிய தெளஹீத் ஜமா அத் தலை­வ­னாக செயற்­பட்ட சஹ்ரான் ஹஷீம் தலை­மை­யி­லான கும்­ப­லினால் 8 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன.

இந்த குண்­டு­வெ­டிப்பு தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளி­லேயே சாரா தொடர்பில் முதலில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. குறிப்­பாக கட்­டு­வா­பிட்­டிய தேவா­லய குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்தின் குண்­டு­தா­ரியின் மனைவி என அடை­யாளம் காணப்­பட்ட சாரா, அந்த குண்­டு­தா­ரியை காத­லித்து, மதம் மாறி அவனை திரு­மணம் செய்­தி­ருந்தார். ( அவ­ரது திரு­மணம் குறித்த சர்ச்­சை­களை இக்­கட்­டுரை ஆரா­ய­வில்லை)

இந் நிலையில், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­கு­தல்­களை நடாத்­திய குண்­டு­தா­ரி­க­ளான சஹ்­ரா­னி­னதும் , ஹஸ்­தூ­னி­னதும் மனை­விமார் உட்­பட மேலும் பலர் சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருப்­பது தெரி­ய­வ­ரவே, அதனை சுற்றி வளைத்த போது, அங்கு இருந்த தற்­கொலை குண்­டு­தா­ரிகள் குண்­டு­களை வெடிக்கச் செய்து தமது உயிர்­களை மாய்த்­துக்­கொண்­டி­ருந்­தனர். அத­னை­ய­டுத்து இரா­ணு­வத்­தினர் முன்­னெ­டுத்த தேடு­தலில், சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவும், அவ­ரது மகளும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் சிகிச்­சை­க­ளி­டையே சஹ்­ரானின் மனை­வி­யிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் சி.ஐ.டி. சிறப்புக் குழு பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தது.

அதன்­படி, குறித்த சாய்ந்­த­ம­ருது வீடு சுற்­றி­வ­ளைக்­கப்­படும் போது அங்கு இருந்­த­வர்கள் யார் யார் என்­பதை சி.ஐ.டி. வெளிப்­ப­டுத்­தி­யது. கொழும்­பி­லி­ருந்து அவர்கள் சாய்ந்­த­ம­ரு­துக்கு செல்லும் வழியே, குரு­ணாகல் மாவட்டம் – கிரி­உல்ல பகுதி துணிக்­க­டையில் அடுத்த கட்ட தாக்­கு­த­லுக்கு என சந்­தே­கிக்­கப்­படும் வெள்ளை ஆடை­களை கொள்­வ­னவு செய்யும் சி.சி.ரி.வி. காட்­சி­களும் அந்த தொடர் விசா­ர­ணை­களில் மீட்­கப்­பட்­டன. அந்த சி.சி.ரி.வி. காட்­சி­க­ளிலும் சாரா உள்­ளிட்­ட­வர்கள் தெளி­வாக விசா­ர­ணை­யா­ளர்­களால் அடை­யாளம் காணப்­பட்­டனர்.

இவ்­வா­றான பின்­ன­ணியில், சட்டத் தேவைக்­காக சாய்ந்­த­ம­ருது வீட்டில் தற்­கொலை செய்­து­கொண்டு உயி­ரி­ழந்த பயங்­க­ர­வாத கும்­பலைச் சேர்ந்­த­வர்­களின் ஆள் அடை­யா­ளத்தை நிரூ­பிக்க, சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதா­வது, சம்­பவ இடத்­தி­லி­ருந்து ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரால் அடை­யாளம் காணப்­பட்டு மீட்­கப்­பட்ட உயி­ரியல் கூறுகள், குண்டு வெடிக்கச் செய்யும் போது வீட்டில் இருந்­த­வர்கள் என சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­களின் இரத்த உற­வு­க­ளிடம் பெறப்­பட்ட உயி­ரியல் கூறு­க­ளுடன் ஒப்­பீடு செய்­யப்­பட்­டன.

இதன்­போது ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அனை­வ­ரி­னதும் டி.என்.ஏ.க்கள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளது இறப்பு அறி­வியல் ரீதியில் உறுதி செய்­யப்­பட்ட போதும், ஹாதியா பெயர் குறிப்­பிட்ட சாரா தொடர்பில் மட்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் தோல்­வி­ய­டைந்­தன. ( ஹாதி­யாவின் வாக்கு மூலத்தை தவிர வேறு சுயா­தீ­ன­மான சாட்­சிகள் ஊடா­கவும் அவ்­வீட்டில் இருந்­த­வர்கள் யார் என்­பதை விசா­ர­ணை­யா­ளர்கள் கண்­ட­றிந்­தி­ருந்­தனர்)

இத­னை­ய­டுத்து அது குறித்து விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. சாராவின் தாயின் டி.என்.ஏ. மாதி­ரி­களை பெற்றே, சம்­பவ இடத்­தி­லி­ருந்த உயி­ரியல் கூறு­க­ளுடன் அது ஒப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் சாய்ந்­த­ம­ருது வீட்டில் குண்டு வெடிக்கச் செய்யும் போது சாரா அங்­கி­ருந்­த­தாக சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் கண்­கண்ட சாட்­சியும், சாரா சாய்ந்­த­ம­ருது வீட்­டுக்கு சென்­ற­மைக்­கான அறி­வியல் தட­யங்­களும் இருக்கும் நிலையில், குண்டு வெடிப்பின் பின்னர் அவ­ருக்கு என்ன ஆனது என்ற தெளி­வான விம்பம் இது­வரை விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் இல்லை.

இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்­புகள் இடம்­பெற முன்னர், இந்­தி­யாவின் உளவுப் பிரி­வொன்­றூ­டாக அது குறித்த தக­வல்கள் இலங்­கை­யுடன் பகி­ரப்­பட்­டி­ருந்­தன. அதன்­படி, சாரா அந்த உளவுப் பிரிவின் முக­வ­ராக கூட இருக்­கலாம் என்ற சந்­தேகம் பர­வ­லாக கலந்­து­ரை­யா­ட­லுக்கு உள்­ளா­கின.

ஏப்ரல் 21 தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய கும்­ப­லுக்கு தலை­வ­னாக செயற்­பட்­ட­தாக நம்­பப்­படும் சஹ்ரான் ஹாஷீம், அவ­ரது சகோ­தரர் ரில்வான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமா அத்தின் சிரேஷ்ட தலை­வ­ராக கரு­தப்­படும் நெளபர் மெள­லவி ஆகியோர் மிக நெருங்­கிய தொடர்­பு­களை பேணிய, இந்­திய மாநில உளவுத் துறை ஒன்றின் அபூ ஹிந்த் எனும் பெயரால் அறி­யப்­படும் நபர் தொடர்பில் சி.ஐ.டி. சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

இலங்­கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, தற்­கொலை தாக்­குதல் இடம்­பெ­றப்­போ­கி­றது என்­ப­தையும், இலக்­கு­க­ளையும் அபூ ஹிந்த் அறிந்­தி­ருந்­தி­ருக்­கலாம் என பர­வ­லான சந்­தேகம் எழுந்­துள்ள நிலையில், அந்த தக­வல்கள் சாரா ஊடாக பரி­மாற்­றப்­பட்­டி­ருக்­கலாம் எனும் சந்­தே­கமும் இல்­லாமல் இல்லை.

தற்­கொ­லை­தாரி சஹ்ரான் ஹாஷீமின் மனைவி பாத்­திமா ஹாதி­யா­விடம் ஆணைக் குழு சாட்­சியம் பெற்ற போது, அபூ ஹிந்த் எனும் ஒரு­வ­ருடன் சஹ்­ரா­னுக்கு 2017 அரை­யாண்­டி­லி­ருந்து தொடர்­புகள் இருந்­தமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அவ்­வ­றிக்கை கூறு­கி­றது.

இந் நிலையில் அபூ ஹிந்த் தொடர்பில், தனது அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்த விரும்­பாத பிர­பல பயங்­க­ர­வாத விவ­காரம் தொடர்­பி­லான சர்­வ­தேச நிபுணர் ஒருவர் மிக ரக­சி­ய­மான சாட்­சியம் ஒன்­றினை வழங்­கி­யுள்­ள­தாக ஆணைக் குழுவின் அறிக்கை கூறு­கின்­றது. குறித்த நிபு­ணரின் சாட்­சி­யத்­துக்கு அமைய அபூ ஹிந்த் என்­பது இந்­திய மாநில உளவுத் துறை ஒன்று வடி­வ­மைத்த கதா­பாத்­தி­ர­மாகும்.

பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சிரி­யா­வுக்கு செல்லும் இந்­தி­யர்கள் இலங்­கைக்கு வந்து செல்­வது தொடர்­பி­லான விட­யங்­களை ஆராயும் உளவு நட­வ­டிக்கை தொடர்பில் அந்த உளவுப் பிரிவு அபூ ஹிந்த் எனும் கதா பாத்­தி­ரத்தை ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தாக குறித்த நிபுணர் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ள­தாக ஆணைக் குழுவின் அறிக்கை கூறு­கின்­றது.

ஏப்ரல் 21 முதல் தற்­கொலை தாக்­கு­தலை தொடர்ந்து வெடி­குண்டு நிரப்­பப்­பட்ட வாகனம் தொடர்­பிலும் குறித்த மூலத்தின் ஊடா­கவே தகவல் தேசிய உளவுச் சேவைக்கு கிடைத்­துள்ள நிலையில், அதன் பிர­கா­ரமே கொச்­சிக்­கடை தேவா­லயம் அருகே குண்டு நிரப்­பப்­பட்ட வேன் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணை­களில் சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்தின் பிர­காரம், சஹ்ரான் உள்­ளிட்ட தற்­கொ­லை­தா­ரிகள் எங்கு தாக்­குதல் நடாத்தப் போகி­றார்கள் என்­பது இறு­தி­வரை இர­க­சி­ய­மாக இருந்­த­தாக கூற­பப்­டு­கி­றது. ஹாதியா கூட அதனை அறிந்­தி­ருக்­க­வில்லை என கூறப்­ப­டு­கி­றது. அப்­படி இருக்­கையில் அந்த தற்­கொலை கும்பல், தாக்­கு­த­லுக்­கான சத்­தியப் பிர­மாணம் செய்யும் வீடியோ சாராவின் கைய­டக்கத் தொலை­பே­சியில் இருந்­த­தா­கவும், அதனை அவர் ஹாதி­யா­வுக்கு காட்­டி­ய­தா­கவும் ஹாதி­யாவின் வாக்கு மூலம் ஒன்று கூறு­கி­றது. அது ஹஸ்தூன் ஊடாக அவ­ருக்கு கிடைத்­தி­ருக்­கலாம் என ஹாதி­யாவின் வாக்கு மூலம் கூறும் நிலையில், சாய்ந்­த­ம­ருது வீட்டில் இருக்கும் போது சாரா அடிக்­கடி தொலை­பேசி அழைப்பில் இருந்­தமை தொடர்­பிலும் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன. எனினும் சாரா தொடர்பில் எந்த தக­வலும் இது­வரை இல்லை.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே, தற்­கொலை தாக்­கு­தல்­களின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில், சாராவை தாம் கண்­ட­தா­கவும், களு­வாஞ்­சிக்­குடி முன்னாள் போக்­கு­வ­ரத்து பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யுடன் அவரைக் கண்­ட­தா­கவும் இரு சாட்­சி­யா­ளர்கள் ஊடாக, தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருக்கு தகவல் கிடைத்­தி­ருந்­தது.

அதன்­படி அவ்­வி­சா­ர­ணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­விடம் கைய­ளிக்­கப்­பட்டு, களு­வாஞ்சிக் குடி பொலிஸ் நிலைய முன்னாள் போக்­கு­வ­ரத்து பிரிவு பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அபூ­பக்கர் என்­பவர் கைது செய்­யப்­பட்டார். அத்­துடன் சாராவின் உற­வினர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்டார். இன்­று­வரை அவ்­வி­ரு­வரும் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுப்பில் உள்­ளனர். எனினும் சாரா பற்­றிய மர்மம் தொடர்­கி­றது.

கடந்­த­வாரம் கொழும்பில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர சாரா தொடர்பில் இரு முறை டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கவும், இரண்­டி­னதும் பெறு­பே­று­களும் ஒரே முடிவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும், மூன்­றா­வது முறை­யாக டி.என்.ஏ. பரி­சோ­தனை ஒன்­றினை முன்­னெ­டுப்­பது தொடர்பில் சட்ட ஆலோ­சனை பெற்று வரு­வ­தா­கவும் கூறினார்.

இவ்­வா­றான நிலையில், சாராவை தாக்­கு­தலின் பின்னர் கண்­ட­தாக முன் வைக்­கப்­பட்­டுள்ள இரு சாட்­சிகள் ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டாக உள்­ள­தா­கவும், சாரா உயி­ருடன் இருக்­கிறார் என்­ப­தற்­கான எந்த சான்­று­களும் இல்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பொது மக்கள் பது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர அவ்­வாறு கூறி­னாலும், சாரா இறந்­து­விட்டார் என முடி­வுக்கு வரவும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் எந்த சான்­று­களும் இல்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில், தாக்­குதல் குறித்த விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பாக இருந்த முன்னாள் சி.ஐ.டி. பணிப்­பாளர் ஷானி அபே­சே­கர அளித்த சாட்­சி­யங்­களில் சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் தற்­கொ­லை­தா­ரிகள் கும்பல் குண்டை வெடிக்கச் செய்து இறந்த பின்னர் நடாத்­தப்­பட்ட சோத­னை­களில் அவுஸ்­தி­ரே­லிய சிம் அட்­டைகள் மீட்­கப்­பட்­டி­ருந்­தமை தொடர்பில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் முழு­மை­யான அனைத்து அறிக்­கைகள், பதிவு செய்­யப்­பட்ட வாக்கு மூலங்­க­ளையும் படித்து ஆராய்ந்த, முன்னாள் சட்ட மா அதிபர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா, உயிர்த்த ஞாயிறு தாக்கு­தல்­களின் பின்­ன­ணியில் நினைப்­ப­தை­விட பாரிய சதித் திட்டம் ஒன்று உள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில் சாரா இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்­றுள்­ள­தா­கவும் அங்கு அவர் பாது­காப்பு இல்லம் ஒன்றில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சில ஊட­கங்­களில் தக­வல்கள் வெளிப்­பட்­டி­ருப்­பினும் அவை எவையும் சாட்­சிகள் ஊடாக உறுதி செய்­யப்­ப­ட­வில்லை.

சஹ்ரான் கும்­ப­லு­ட­னேயே இருந்து சாய்ந்­த­ம­ருது தற்­கொலைத் தாக்­கு­தலின் பின்னர் இறந்­த­தாக எந்த அறி­வியல் தட­யங்­களும் இல்­லாத, கட்­டு­வா­பிட்டி தேவா­லய தாக்­கு­தல்­தா­ரியின் மனைவி சாரா ஜெஸ்மின் குறித்த விசா­ர­ணை­க­ளையும் இடை நிறுத்­தாது உண்­மை­களை வெளிப்­ப­டுத்த தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்டும் என ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு தனது இறுதி அறிக்­கையின் 17 ஆம் அத்­தி­யாயம் ஊடாக பரிந்­து­ரைத்­துள்­ளது.

இவ்­வா­றா­னதோர் பின்­ன­ணியில் சாரா உயி­ருடன் இருக்­கி­றாரா?, அவ்­வாறு இருப்பின் எங்கே உள்ளார்? அவர் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களில் எவ்­வா­றான பங்­க­ளிப்­பினை அளித்தார் போன்ற விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­படும் போது மட்­டுமே, தாக்­கு­தலின் பின்­ன­ணியில் உள்ள ‘ மாஸ்டர் மைன்ட்’ யார் என்­பதை நெருங்க முடியும்.

தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான முக்­கிய விட­யங்­களை வெளிப்­ப­டுத்த முடி­யு­மான சாரா விவ­காரம் விடை­யின்றி தெளி­வற்­ற­தாக தொடரும் நிலையில் ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள், அதற்கு முன்னர் நாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் 881 சந்­தேக நபர்கள் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதில் 724 பேர் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் ஏனையோர் தாக்­கு­த­லுக்கு முன்­ன­ரான பல்­வேறு அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் கூறு­கின்­றனர்.

பொலி­ஸாரின் தகவல் பிர­காரம், இந்த தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் 2019 ஏப்ரல் மாதம் அவ்­வந்த பொலிஸ் நிலை­யங்­களால் ஆரம்­பிக்­கப்­பட்டு பின்னர் சி.ஐ.டி.யின­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

அது முதல் இந்த தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்பில் 724 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் 227 பேர் விசா­ர­ணை­களை தொடர்ந்து நீதி­மன்­றங்­களில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். தற்­போது 83 பேர் சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரின் தடுப்பில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

சுமார் 205 மில்­லியன் ரூபா வரை­யி­லான பணம், தங்க நகைகள், மாணிக்கக் கற்கள் பொலி­ஸா­ரினால் இவ்­வி­சா­ர­ணை­களில் மீட்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 100 வங்கிக் கணக்­கு­களில் உள்ள 134 மில்­லியன் ரூபா பணம் வரை தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த தாக்­கு­தல்கள் தொடர்பில் 9800 வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. சுமார் 21 ஆயிரம் தொலை­பேசி இலக்­கங்கள் பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

1000 ஏக்கர் வரை­யி­லான நிலம் பெள­தீக ரீதி­யாக பொலிஸ் பொறுப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளன. கேகாலை, புத்­தளம் மாவட்­டங்­களில் இவ்­வா­றான நிலங்கள் பொலிஸ் பொறுப்பில் உள்­ளன.

இது இவ்­வா­றி­ருக்க இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து செல்லும் போதே, தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுக்கு தலைமை வகித்த சஹ்ரான் ஹஷீம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­களை திட்­ட­மிட்டு பரப்­பி­யமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­பட்­டது. எனவே பொலிஸார், தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுக்கு மேல­தி­க­மாக 2018 ஆம் ஆண்டு முதல் அடிப்­ப­டை­வா­தத்தை வளர்க்க முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் விசா­ரணை நடாத்­தப்­பட்­டது.

இதற்­காக கடந்த 2018 ஆம் ஆண்டு அடிப்­ப­டை­வாத வகுப்­புக்­களை அவர் நடாத்தி இருந்தார். அந்த வகுப்புக்களில் பங்கேற்று, தற்கொலை தாக்குதல்கள் நடாத்த ‘பையத்’ எனும் உறுதி மொழி எடுத்த 84 ஆண்கள், 7 பெண்கள் இதுவரை விசாரணைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் முகப்புத்தகம், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் ஊடாக அடிப்படைவாத நடவடிக்கைகளை ஊக்குவித்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்­துடன் தாக்­குதல் நடாத்­தப்­ப­டு­வ­தற்கு முன்னர் சஹ்­ரா­னுடன் நெருங்­கிய தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்த, அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க உதவி ஒத்­தாசை அளித்த 23 ஆண்கள் 2 பெண்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் 2018 ஆம் ஆண்டு முதல் சஹ்ரான் ஹஷீமின் அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துச் செல்ல வெளி­நா­டு­களில் இருந்து நிதி­ய­ளித்த, ஆத­ர­வ­ளித்த 15 பேர் கட்டார், டுபாய், குவைட் உள்­ளிட்ட நாடு­களில் இருந்து இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்டு தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
அதன்­படி மொத்­த­மாக இது­வரை 800 இற்கும் அதி­க­மா­ன­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பொலிஸார் கடந்த வாரம் இந்த தக­வல்­களை வெளி­யிட்ட நிலையில், கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடுக்கும் செயற்­பா­டுகள் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­த­ரவின் கீழ் இடம்­பெற்று வந்­தன. அதற்­காக சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. அதி­கா­ரிகள் 54 பேர் உதவி வந்­தனர்.

எது எப்­ப­டியோ, முன்னாள் சட்ட மா அதிபர் வெளிப்­ப­டுத்திச் சென்ற, தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் உள்ள பாரிய சதி விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக உணர உணர முடியவில்லை.

எம்.எப்.எம்.பஸீர் புலஸ்­தினி மகேந்­திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள ஒரு பெண். நீர்­கொ­ழும்பு – கட்­டு­வ­ாபிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய…

எம்.எப்.எம்.பஸீர் புலஸ்­தினி மகேந்­திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள ஒரு பெண். நீர்­கொ­ழும்பு – கட்­டு­வ­ாபிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய…