அசாத் சாலிக்கு எதிராக PTA, ICCPR இன் கீழ் குற்றச்சாட்டு பதிவு

  • 5

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடந்த மார்ச் 09 ஆம் திகதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக, பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சட்டத்தின் (ICCPR) கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (28) சட்ட மாஅதிபர் இதனை அறிவித்திருந்தார்.

முஸ்லிம் சட்டத்தை யார் மாற்றினாலும் நாம் மாற்றப் போவதில்லை. எமது சட்டம் எங்களுக்கு, உங்களது சட்டம் உங்களுக்கு. அதிலுள்ள சரி, பிழை பற்றி பார்க்க வேண்டியவர்கள் நாம். அரசாங்கத்தின் சட்டம் அரசாங்கத்திற்கு. புத்தகத்தில் மாற்றியுள்ளார்கள் என்பதற்காக எமது சட்டத்தை மாற்ற முடியுமா? முடியாது எனும் கருத்துப்பட அசாத் சாலி ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு ஒன்றை, பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர நியமித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மார்ச் 16 ஆம் திகதி அசாத் சாலி கைது செய்யப்பட்டதோடு, பின்னர் அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமையவும் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடந்த மார்ச் 09 ஆம் திகதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக, பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல்…

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடந்த மார்ச் 09 ஆம் திகதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக, பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல்…