நாளை ஒரு நாள் தொடர் ஆரம்பம் – திக்வெல்ல, குசல், தனுஷ்க இடைநீக்கம்

  • 8

கொவிட்-19 தொடர்பான உயிர் பாதுகாப்பான குமிழியை மீறியதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக ஆகியோரை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள அவர்கள், நேற்றிரவு டேர்ஹமில் இருந்து இவ்வாறு அணியிலிருந்து விலகி சுகாதார வழிகாட்டல்களை மீறி நடந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள், சுற்றுப்பயணத்திலிருந்து நீக்கப்பட்டு உடனடியாக வீட்டிற்கு அனுப்ப பணிக்கப்பட்டுள்ளார்கள். ஆயினும் இத்தொடரிற்கு இது வரை எவ்வித பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரில் குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய இருவரும் இரவு வேளையில், ஒரு பொது இடத்தில் நிற்கும் வீடியோ காட்சியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. குறித்த வீடியோவில் தனுஷ்க குணதிலக காணப்படாத போதிலும், அவர்கள் மூவரும் ஒன்றாக வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கிரிக்கெட் சுற்றுத் தொடர்பில் பங்குபற்றும் வீரர்கள் டேர்ஹமின் சிட்டி சென்டருக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களென திட்டவட்டமாகக் கூறப்பட்டிருந்த நிலையில், குறித்த மூவரும் அதனை மீறிச் சென்றதாக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு வாகனத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட குறித்த வீடியோவில் மெண்டிஸ், திக்வெல்லா ஆகியோர் குறித்த பகுதியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இரு வீரர்களும் முகக்கவசங்களை அணியாது அதனை கைகளில் வைத்திருக்கின்றமையும் அதில் காணப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவன மருத்துவ அதிகாரிகள் சமூக ஊடகங்கள் வழியாக இவ்வாறு சுகாதார வழிகாட்டல் குமிழி மீறப்பட்டமை தொடர்பில் தாம் அறிய வந்துள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

ஆயினும் இவ்விடயம் தெரிய வந்ததைத் தொடர்ந்து குறித்த மூன்று வீரர்களையும் அவர்களின் அறைகளில் தனிமைப்படுத்தியாக உறுதி செய்துள்ளனர்.

இவ்வாறு வெளியில் சென்ற இவ்வீரர்கள் நள்ளிரவில் தங்கள் அறைகளுக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் சுற்றுப்பயணக் குழுவில் உள்ள ஏனையவர்களின் சுகாதார வழிகாட்டல் பாதுகாப்பு குமிழியை ஆபத்துக்குள்ளாக்கவில்லை என நம்பப்படுகின்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி நடந்து முடிந்த 3 ரி20 போட்டிகளிலும் நாணயச் சுழற்சியில் மாத்திரம் வெற்றி பெற்றதோடு, போட்டிகள் அனைத்தையும் இங்கிலாந்து அணி வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை (29.06.2021) ஆரம்பகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 தொடர்பான உயிர் பாதுகாப்பான குமிழியை மீறியதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக ஆகியோரை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள அவர்கள்,…

கொவிட்-19 தொடர்பான உயிர் பாதுகாப்பான குமிழியை மீறியதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக ஆகியோரை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள அவர்கள்,…