உலமா சபை சீன தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டம் என்ன?

  • 17

கடந்த சில நாட்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் சீன தூதரகத்தின் அலுவல்கள் பொறுப்பதிகாரி திரு. ஹுவியை சந்தித்து போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்று பற்றி கடந்த வதந்திகள் வௌிவந்த நிலையில் அதுபற்றிய தௌிவொன்றை அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபை வௌியிட்டுள்ளது.

இது தொடர்பாக வௌியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கையில்,

‘கொவிட்-19 இற்கு எதிரான போராட்டம்’ என்ற கருப்பொருளின் கீழ் சீன தூதரகத்துடன் இணைந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வொன்று சென்ற வருடம் 2020.06.10 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது சர்வமத தலைவர்கள், பொதுமக்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் என பலருக்கு சீன தூதரகத்தின் பங்களிப்பில் முகக் கவசங்கள், சுத்திகரிப்பு திரவியங்கள் போன்றவை வழங்கப்பட்டன.

சென்ற வருடம் 2020.07.28 ஆம் திகதியன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் சீன தூதரகத்திற்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது தூதரகத்தின் அலுவல்கள் பொறுப்பதிகாரி திரு. ஹுவியை சந்தித்து மேற்படி திட்டத்தின் நிறைவு அறிக்கையை கையளித்தார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இத்தோடு இணைந்ததாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் சீனத் தூதரகத்துடன் இணைந்து கொழும்பு நகரில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டம் அதே காலப்பகுதியில் நடைபெற்றது.

இதன் மூலம் சுமார் 11 பாடசாலைகளின் க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும் பல மாணவ மாணவிகள் பயனடைந்ததோடு, 2020.09.02 ஆம் திகதி பாடசாலை உபகரணங்கள் விநியோக நிகழ்வொன்றும் கொழும்பு-10 அல்- ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் செயல் தூதர் மற்றும் அவரது குழுவினர் உட்பட ஜம்இய்யாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக 18 பாடசாலைகளிலிருந்து 135 மாணவர்கள், அவர்களின் அதிபர்களோடு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இக்கல்வித் திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக 2,200,000 ரூபாய் சீன தூதரகத்தால் வழங்கப்பட்டதோடு இத்திட்டத்திற்கு முழுமையாக 2,303,287.50 ரூபாய் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த நிகழ்வுகளின் படங்கள் கீழே இனைக்கப்பட்டுள்ளன. எனவே, இவை தொடர்பில் வீணான வதந்திகளை பரப்பாமல் இருக்குமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் எந்த ஒரு பண விடயத்திலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் வரலாறு நெடுகிலும் செயற்பட்டு வந்துள்ளது என்பதையும், இனிமேலும் அவ்வாறே செயற்படும் என்பதையும் உறுதியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். என தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் சீன தூதரகத்தின் அலுவல்கள் பொறுப்பதிகாரி திரு. ஹுவியை சந்தித்து போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்று பற்றி…

கடந்த சில நாட்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் சீன தூதரகத்தின் அலுவல்கள் பொறுப்பதிகாரி திரு. ஹுவியை சந்தித்து போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்று பற்றி…