கல்விக்காக பதினைந்து தொலைக்காட்சி அலைவரிசைகள்

  • 12

ஷம்ஸ் பாஹிம்

மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்காக 15 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய உரையில் பாடசாலைகள் தொடர்பாக தவறான கருத்து முன்வைத்திருப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், அவருக்கு வழங்கப்படும் தகவல் படியே அவர் உரையாற்றினார். இது பற்றி எங்கும் விவாதிக்கலாம். தொற்று நிலையில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்‌ஷ பல்வேறு செயற்பாடுகளை எடுத்து வருகிறார்.

அடுத்த தடுப்பூசி கையிருப்பை முழுமையாக ஆசிரியர்களுக்கும் அதனுடன் தொடர்புள்ளவர்களுக்கும் ஏற்றி கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலவசமாக டேட்டா வழங்கும் வாய்ப்பு பற்றியும் ஆராயப்படுகிறது. நாட்டுத்தலைவரின் உரை தொடர்பில் கடந்த காலத்திலும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பாராளுமன்றத்திலும் இது பற்றி பேசப்படலாம்.

ஷம்ஸ் பாஹிம் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்காக 15 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிப்பது குறித்து…