பெண்ணே துணிந்தெழு!

  • 29

பெண்ணே உன்னை
நான்கு சுவற்றுக்குள்
முடக்கிட நினைப்பவர்களுக்கும்
அடுப்பங்கரையில் அடைத்திட
நினைப்பவர்களுக்கும் முன்னால்
பெண்ணே துணிந்தெழு!

உன்னை காம வேட்டையில்
சிறைபிடிக்க
நினைப்பவர்களுக்கு
அவமானங்களால் சிதைக்க
நினைப்பவர்களுக்கும் முன்னால்
பெண்ணே துணிந்தெழு!

உன்னை வதந்திகளால்
வென்றிட நினைப்பவர்களுக்கும்
வார்த்தைகளால் மயக்க
நினைப்பவர்களுக்கும் முன்னால்
பெண்ணே துணிந்தெழு!

மிரட்டல்களால் மானம்
இழக்க நினைப்பவர்களுக்கும்
உன் கனவை பெண்மை
உரிமையை கற்பை
இலக்கை கூருபோட
நினைப்பவர்களுக்கும் முன்னால்
பெண்ணே துணிந்தெழு!

எதற்கும் துணிந்து நில் – ஆயினும்
பணிந்து நில்லாதே!

Noor Shahidha

பெண்ணே உன்னை நான்கு சுவற்றுக்குள் முடக்கிட நினைப்பவர்களுக்கும் அடுப்பங்கரையில் அடைத்திட நினைப்பவர்களுக்கும் முன்னால் பெண்ணே துணிந்தெழு! உன்னை காம வேட்டையில் சிறைபிடிக்க நினைப்பவர்களுக்கு அவமானங்களால் சிதைக்க நினைப்பவர்களுக்கும் முன்னால் பெண்ணே துணிந்தெழு! உன்னை வதந்திகளால்…