தியாகத் திருநாள் வந்தது

  • 14

தியாகத் திருநாள் வந்தது
ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது
இப்ராஹிம் நபியின் தியாகத்திற்கு
பதில் அளிக்கப்பட்ட திருநாள் வந்தது.

பாலைவனத்தில் பச்சிளம் பாலகனுடன்
இறை நாட்டத்தை தடைவிதித்து
தகர்த்திடாத அன்னை ஹாஜராவின் பொறுமைக்கான வெற்றியின் நாள் வந்தது

நீங்கள் பொறுமையாளர்களில்
என்னைக் காண்பீர்கள் என
தன்னை இஸ்லாத்திற்கான
உயிர்த் தியாகம் செய்ய
இப்றாஹிமுக்கு அனுமதி கொடுத்த
இஸ்மாயிலின் நற்குணம்
குர்பானி எனும்கடமையுடன்
நினைவு வந்தது

முஸ்லிம்களின் கிப்லாவான
கஃபாவின் புனிதமானது
பக்ரீத் திருநாளின்
தக்பீர் முழக்கங்களுடன்
மாபெரும் ஒளியை
பாய்ச்சும் நாள் வந்தது

இஸ்லாத்தின் ஐந்தாவது நெம்புகோள்
ஹஜ்ஜு என்னும் கடமையை நிறைவேற்ற
ஹாஜிகளின் கூட்டம் அணிவகுக்குது

பக்ரீத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளின்
மகிமை உலகமெல்லாம்
நறுமணமாய் வீசுது
இறைத்தூதர் முஹம்மதுவை
வழிகாட்டியெனக் கொண்ட
ஈமானிய உள்ளங்களின்
ஈதுல் அல்ஹா இனிதே
துல் ஹஜ்ஜில் வந்தது

அனைவரும் உள்ளத்தால் உணர்ந்து
உதடுகளால் மொழிவோம்.

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லாஷரிகலக்க லப்பைக்

H.F. Badhusha
SEUSL 

தியாகத் திருநாள் வந்தது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது இப்ராஹிம் நபியின் தியாகத்திற்கு பதில் அளிக்கப்பட்ட திருநாள் வந்தது. பாலைவனத்தில் பச்சிளம் பாலகனுடன் இறை நாட்டத்தை தடைவிதித்து தகர்த்திடாத அன்னை ஹாஜராவின் பொறுமைக்கான வெற்றியின் நாள்…