பலஸ்தீன வரைபடத்தை மாற்றிய ஒலிம்பிக் விழா

  • 13

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஓராண்டு பிற்போடப்பட்ட ஒலிம்பிக் போட்டி விழா நேற்றைய தினம் ஆரம்பமாகியது.

குறித்த ஆரம்ப விழாவில் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் மற்றும் தூதுக்குழுக்கள் அரங்கில் நு​ழையும்போது குறித்த நாட்டின் வரைபடம் மற்றும் தேசிய கொடி என்பன காட்சிப்படுத்தப்படுகின்றன.

என்றாலும் குறித்த வரைபடங்களில் CNBC (சி.என்.பி.சி) செய்திச்சேவை வித்தியசமான வரைபடமொன்றை ஔிபரப்பியதாக பலஸ்தீனத்தை மையமாகக் கொண்டு இயங்கும் (Quds News Network) குந்ஸ் செய்தி வலையமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வௌியிட்டுள்ள அறிக்கையில் டோக்கியோவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பாலஸ்தீனிய தூதுக்குழு நுழைந்த தருணத்தில் அதன் திரையில் தோன்றிய பாலஸ்தீனத்தின் துண்டு துண்டான வரைபடத்தை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இதனை அமெரிக்காவை மையமாகக் கொண்ட சிஎன்பிசி செய்திச்சேவை காட்சிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

குறித்த வரைபடம் தவறு என்று குறிப்பிட்டுள்ள குந்ஸ் செய்தி வலையமைப்பு, பலஸ்தீனத்தின் சரியான வரைபடத்தையும் வௌியிட்டுள்ளது. LNN Staff

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஓராண்டு பிற்போடப்பட்ட ஒலிம்பிக் போட்டி விழா நேற்றைய தினம் ஆரம்பமாகியது. குறித்த ஆரம்ப விழாவில் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் மற்றும் தூதுக்குழுக்கள் அரங்கில் நு​ழையும்போது குறித்த நாட்டின்…