போர்வை புன்னகை வாடாத பெளஸுல் கரீம் சேர்

  • 17

மரணம் யதார்த்தமானது. ஆனால், நெருங்கிய உறவுகளின் மரணங்களை ஏற்று கடந்து செல்வது என்பது அத்தனை எளிதானதாயில்லை.

இறைவன் விதித்த தருணம் வரும் போது யாரும் யாருக்காகவும் காத்திருக்க முடியாதே. இன்று நீங்கள் எம்மோடு இல்லை. முந்திச் சென்று விட்டீர்கள்!

ஸாதாத்தில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்று பாடசாலைக்கு வந்து முதல் ஸலாம் சொன்னது உங்களுக்குத்தான். அன்று முதல் கரீம் ஸேருக்கும் எனக்கும் நல்ல உறவுதான். இவ்வளவு அவசரமாக உங்களை இழந்துவிடுவோம் என்று எதிர்பார்க்கவே இல்லை. இறைவனின் நாட்டத்தை பொருந்திக் கொள்வோம்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கரீம் ஸேர் உங்களிடம் நான் கற்றுக் கொண்டவை ஏராளம். எப்போதும் புன்னகை வாடாத உங்கள் முகம் அப்படியே இருக்க வேண்டும்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் நீங்கள். எவர் மனமும் புண்படாதவாறு நடந்துகொள்வதில், உதவி செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். எந்தவொரு கடின வேலையையும் செவ்வனே செய்து முடித்துவிடுவீர்கள். உங்களோடு ஒன்றாக வேலை செய்த நாட்களில் பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

சுற்றுலா, பாடசாலை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச் செல்லல் என அனைத்திலும் எனக்கு முன்மாதிரி நீங்கள் தான். வல்ல அல்லாஹ் உங்கள் அமல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலான ஜன்னதுல் பிர்தெளஸ் உங்களுக்கு நிரந்தரமாக இருகரமேந்தி பிரார்த்திக்கின்றேன்.

Ashkar Ameen
See less

மரணம் யதார்த்தமானது. ஆனால், நெருங்கிய உறவுகளின் மரணங்களை ஏற்று கடந்து செல்வது என்பது அத்தனை எளிதானதாயில்லை. இறைவன் விதித்த தருணம் வரும் போது யாரும் யாருக்காகவும் காத்திருக்க முடியாதே. இன்று நீங்கள் எம்மோடு இல்லை.…

மரணம் யதார்த்தமானது. ஆனால், நெருங்கிய உறவுகளின் மரணங்களை ஏற்று கடந்து செல்வது என்பது அத்தனை எளிதானதாயில்லை. இறைவன் விதித்த தருணம் வரும் போது யாரும் யாருக்காகவும் காத்திருக்க முடியாதே. இன்று நீங்கள் எம்மோடு இல்லை.…