தம்பிலுவில், திருக்கோவில் பிரதேசங்களில் கடலரிப்பு

  • 7

ஆர்.நடராஜன்

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பிரதேசம் தொடக்கம் தம்பட்டை பிரதேசம் வரை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் கடல் அரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னந் தோட்டங்கள் கடலுடன் சங்கமமாகும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது.

தம்பிலுவில், திருக்கோவில், தம்பட்டை,களுதாவளை, விநாயகபுரம், மங்கமாரியம்மன் தோட்டம் போன்ற கடலை அண்மித்த கிராமங்கள் மீன்பிடி வள்ளங்கள் நிறுத்துவதற்கான இடமும் பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமும் இல்லாமல் போகும் ஆபத்து அதிகரித்து வருகின்றது.

எனவே, சிறந்த கடற்கரையோர சூழலை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பிரதேசத்திலுள்ள சமூக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்தக் கடல் அரிப்பு பிரச்சினை தொடர்பில் அம்பாறை மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கேட்ட போது “திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள கடலரிப்புப் பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரளவுக்கேனும் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் தம்பிலுவில் சிவன்கோவில் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்துக்கு சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இதேவேளை விநாயகபுரம் -03 கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட கடற்கரையோரத்தில் கடலரிப்பைத் தடுக்கும் நோக்கில் அம்பாறை மாவட்ட வனபரிபாலனத் திணைக்களத்தினாலும் சவுக்கு மரங்கள் நடப்பட்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தங்களின் தேவைகளுக்காக பொதுமக்கள் மணல் அகழ்வை மேற்கொண்டுள்ளனர். இதனாலும் கடல் அலை உட்புகுவதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது இங்கு மணல் அகழ்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடலரிப்பை பூரணமாக கட்டுப்படுத்த வேண்டுமாயின், கடற்கரையோரத்தில் கருங்கல் வேலிகள் அமைக்கப்பட வேண்டும்.

இதற்கு அதிக நிதி தேவைப்படுவதாகவும் இது தொடர்பில் எதிர்காலத்தில் உரிய அதிகாரிகள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

ஆர்.நடராஜன் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பிரதேசம் தொடக்கம் தம்பட்டை பிரதேசம் வரை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் கடல் அரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னந் தோட்டங்கள் கடலுடன்…

ஆர்.நடராஜன் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பிரதேசம் தொடக்கம் தம்பட்டை பிரதேசம் வரை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் கடல் அரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னந் தோட்டங்கள் கடலுடன்…