போலந்து கல்வி முறைமை

ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப கல்வியின் நோக்கம் மாறிக்கொண்டே செல்கின்றது ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் கல்வியின் நிலை மிக மோசமான நிலையிலுள்ளது.

கல்வியினுடைய உண்மையான நோக்கம் நம்பிக்கை ஊட்டுவது, சக மனிதன் மீதான பிரியத்தை தருவது, சமூகத்தில் பிரச்சினை நடக்கின்ற பொழுது எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை தரவேண்டும். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற உத்வேகத்தை தரவேண்டும்.

இப்படி இருக்க தற்போதைய கல்வி முறைமை எமக்கு இவற்றையா சொல்லித் தருகின்றது? பாடசாலை சமூகமும் சரி வீட்டு சூழலும் சரி எமக்கு சொல்லித் தருவது கல்வி என்பது பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறை என்பதைத்தானே நன்றாகப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் வேலை கிடைத்தால்தான் நன்றாக வாழ முடியும் என்கின்ற மாயையை எம்முள் விதைத்துள்ளார்கள்.

யாராவது தவறு செய்தால் படித்தவர் தானே இவருக்கு தெரியாதா என்கின்றோம் இதிலிருந்து எமக்கு விளங்குவது கல்வி என்பது ஒழுக்கத்தையும் நாகரீகத்தையும் சொல்லித் தருகின்றது என்பதைத்தானே இதனை எமது பாடசாலைகள் சொல்லித்தர மறந்தது ஏன்?

கல்வியின் நோக்கம் நிறைவேறாமல் நாம் அனைத்து பாடங்களிலும் A புள்ளிகள் பெற்று சித்தி அடைந்தாலும் எந்தப் பயனும் இல்லை தற்போது உள்ள 21ஆம் நூற்றாண்டில் covid19 காரணமாக கல்வியின் நிலை மிக மோசமான நிலையில் உள்ளது.

பாடசாலைக்குச் சென்று சக மாணவர்களுடன் ஒன்று சேர்ந்து தொடர்பாடல் கொண்டு கற்ற கல்வி தற்போது இணைய வழி மூலமாக கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேசரீதியில் வியாபித்த ஒரு கருப்பொருளாக கல்வியுள்ளது. தற்போது யுனிசெப் நிறுவனம் ஜனவரி 24ஆம் திகதி சர்வதேச கல்வி தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது எனவே இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக covid-19 தலைமுறைக்கான கல்வியை மீட்டெடுத்து புத்துயிர் பெறச் செய்வோம் என்பதாகும்.

உலகின் தலை சிறந்த கல்வி முறைமையை கொண்ட நாடு போலந்தாகும். போலந்தில் கல்வி முறைக்காக 7 சுவாரஸ்யமான சட்ட முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது அந்த வகையில் எமது நாட்டை பொறுத்தவரையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கல்வி கற்பதற்கு 4 அல்லது 5 வயதிலே அனுப்பிவிடுவார்கள்.

ஆனால் போலந்தின் சட்ட முறைப்படி 7 வயதில்தான் முதன் முதலில் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் அதற்கு முன்னர் அனுப்பி விடாதீர்கள் என்று கூறுகின்றார்கள் இதற்கு அவர்கள் கூறும் காரணம் தாய் தந்தையர்களை விட குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு சிறந்த ஆசான் கிடையாது.

ஏழு வயது வரைக்கும் உங்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து எது சரி எது தவறு என்று சொல்லிக்கொடுங்கள் என்கின்றனர்.

இரண்டாவது விடயம் பரீட்சைகள் எதுவும் கிடையாது. யாரும் fail pass என்பது கிடையாது. எல்லோரும் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும் என்பதாகும்.

இப்படியான நம்பிக்கைகளை மாணவர்கள் மீது வைக்கின்றபொழுது ஆர்வத்துடன் படிப்பார்கள் அங்குள்ள வகுப்பில் கற்றால்தான் இங்குள்ள வகுப்பில் விளங்கிக் கொள்ள முடியும் என்று படிப்பார்கள். இக்கல்வி முறைமை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

அடுத்து இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் இந்த நாட்டில் உள்ள மக்கள் அங்கு பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களை நம் நாட்டில் உயிர்காக்க வைத்தியருக்கு எவ்வளவு மரியாதையும் உயர்வும் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு அங்குள்ள ஆசிரியர்கள் மதிக்கப்படுகிறார்கள். நம் நாட்டில் உள்ளது போன்று ஆசிரியர்கள் இலகுவாக தெரிவு செய்யப்படுவது கிடையாது. நம் நாட்டில் வைத்தியராவது எவ்வளவு கஷ்டமோ அதுபோல போலந்தில் ஆசிரியர் ஆவது மிகவும் கஷ்டம் வைத்தியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகின்றது. அதுபோன்று போலந்தில் உள்ள ஆசிரியர்களுக்கு அதே அளவான சம்பளம் வழங்கப்படுகின்றது.

போலந்தின் புள்ளி வழங்கும் முறைமை என்றவுடன் நீங்கள் சிந்திக்கலாம் பரிட்சை இல்லாமல் எவ்வாறு புள்ளி வழங்குவது என்று ;அவர்கள் செய்கின்ற ஒப்படைகள் தனிநபராக செய்யாமல் குழுவாக மேற்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் வகுப்பில் நடந்து கொள்கின்ற முறைமை அவர்கள் நண்பர்களுடன் எவ்வாறு தங்களுடைய வேலைகளை பங்குபோட்டு செய்கின்றார்கள் என்பவற்றை பொறுத்தே புள்ளி வழங்கப்படுகின்றது புள்ளிகளின் மூலம் மாணவர்களின் திறமைகளை மதிப்பிடாமல் மாணவர்களின் திறமையைக் கொண்டே அவர்களை மதிப்பிடுகிறார்கள்.

அடுத்த விடயம் பாடசாலை நடைபெறுகின்ற மொத்த நேரம் 4 மணி நேரம் மாத்திரமே ஒருவர் பேசுவதை இன்னொருவர் கவனிக்கக்கூடிய ஆற்றலுள்ள நேரம் 4 மணி நேரமே அதிலும் நிறைய இடைவெளிகள் இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும் இதில் நமக்கு புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால் பாடசாலையில் கல்வி கற்கின்ற மொத்த நேரமே நான்கு மணி நேரம் எனும் பொழுது நன்றாக கற்க வேண்டும் எமது பெற்றோர்கள் இங்கே எம்மை கல்வி கற்க அனுப்பி இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்கள் என்பது முக்கியமான ஒரு விடயம்.

ஒரு பாடம் முடிந்தவுடன் அடுத்த பாடம் தொடங்குவதற்கான நேர இடைவேளை 15 நிமிடங்கள் ஆகும் இதன் மூலம் மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்பார்கள் என்று கூறுகின்றார்கள்.

போலந்து கல்வி முறைப்படி மாணவர்களுக்கு வீட்டு வேலை(Home Work) கொடுப்பது அரை மணி நேரமே இங்கு வீட்டு வேலை எனும் பொழுது அவர்களுக்கு வழங்குகின்ற குழுவாக செய்யும் ஒப்படை களையே குறிக்கின்றது.

ஒரு வகுப்பில் கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து கொடுக்கின்ற வீட்டு வேலை அரை மணி நேரம் மாத்திரம் இருக்க வேண்டும் அதற்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பது முக்கியமான ஒரு விடயமாகும். அந்த அரைமணி நேரத்திற்குள்தான் ஒப்படைகள் செய்வது வீட்டில் சென்று கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற எந்த விடயமாக இருந்தாலும் அரை மணி நேர நேரத்திற்குள்ளாகவே இருக்க வேண்டும்.

இறுதியான விடயம் பாடசாலையில் வழங்கப்படுகின்ற உணவு இடைவேளை 75 நிமிடங்கள் ஆகும். மாணவர்கள் உணவு உண்ட பின்னர் சக மாணவர்களுடன் பேசுவதற்காகவும் ஏனைய வகுப்பிலுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக ஆகும்.

ஒரு நாட்டின் நாளைய தலைவர்கள் பாடசாலை என்னும் தளத்தில் இருந்துதான் உருவாகிறார்கள். மாணவர்களுக்கிடையிலான தொடர்பாடல் திறன் என்பது அப்பாடசாலையில் உள்ள சகபாடிகளுக்கு இடையில் மட்டுமல்லாமல் ஏனைய தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுடனும் தொடர்பாடல் புரிவதன் ஊடாக அந்த மாணவர்களுக்கிடையிலான தொடர்பாடல் விருத்தியடைகின்றது என்பதற்காகவே இப்படியான கல்வி முறைமை பின்பற்றப்படுகின்றது.

கல்வியினுடைய நோக்கத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்றால் கல்விக்கான நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான சிறந்த திட்டமிடலையும் அதன் இலக்குகளை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ளும்போது கல்வியின் நோக்கத்தை முழுமையாக மாணவ சமூகம் அடைந்து கொள்ளும்.

இதனை அடைந்து கொண்டால்தான் ஏனைய உலக நாடுகளிலும் எமது நாட்டிலும் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும்.

ஆகவே உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் போலந்தின் உடைய கல்வி முறைமை தான் சிறந்த கல்வி முறைமை என உலக நாடுகளே ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால் இதனை ஏற்றுக் கொண்ட உலக நாடுகளே இந்த முறைமையினை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் ஒரு கேள்விக்குறியே? ஆகும் ஏனைய நாடுகள் கல்வியை ஒரு வணிகமாக பார்க்கின்ற பொழுது போலாந்து மாத்திரம் கல்வியை கல்வியாக பார்க்கின்றது

CM.BISMI SAHA
AK/AS-SIRAJ NATIONAL SCHOOL
AKKARAIPATTU