முஸ்லிம் சேவை மீண்டும் ஆரம்பம்

  • 9

முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் வழமை போன்று அதே (102.1, 102.3) தேசிய சேவை அலைவரிசைகளில் இன்று இரவு 08.00 மணி முதல் மீண்டும் ஒலிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கல்வி அமைச்சின் அனுசரனையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ‘விசன் எப்.எம்’ எனும் கல்விச் சேவையொன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையின்  102.1 அலைவரிசையும், பிறை எப்.எம் இயங்கிய 102.3 அலைவரிசையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்றிரவு மற்றும் இன்று காலை முஸ்லிம் நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை. இந்த புதிய சர்ச்சை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

கூட்டத்தின் முடிவுகளுக்கமைய முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் வழமை போன்று அதே (102.1, 102.3) தேசிய சேவை அலைவரிசைகளில் இன்று இரவு 08.00 மணி முதல் மீண்டும் ஒலிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. LNN Staff

முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் வழமை போன்று அதே (102.1, 102.3) தேசிய சேவை அலைவரிசைகளில் இன்று இரவு 08.00 மணி முதல் மீண்டும் ஒலிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கல்வி அமைச்சின் அனுசரனையில்…