117 கோடிக்கு மேல் கொவிட் நிதி தேவை – ஏனைய உறுப்பினர்கள் வழங்க முன்வருவார்களா?

அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் எதிர் கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தையும், ‘இட்டுகம’ (செய்கடமை) கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக ஏகமனதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவை அமைச்சர்கள் இன்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளனர். அவ்வாறே நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

தனது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை முழுதுமாக கொவிட் நிவாரண நிதிக்கு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார்.

என்றாலும் மேலும் இட்டுகம’ (செய்கடமை) கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ரூ. 117 கோடி 26 இலட்சத்து 85 ஆயிரத்து 76 நிதி அவசியமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ரூபா 182 கோடி 73 இலட்சத்து 14 ஆயிரத்து 924 (ரூ. 1,827,314,924) நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், கொவிட் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கு பெருமளவான நிதியை செலவிடவுள்ள வேண்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேவையான 117 கோடிக்கு மேற்பட்ட நிதிக்கு பங்களிப்புச் செய்ய ஆளுங் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜே.வி.பி மற்றும் ஐ.தே.கவின் தலைவர் ஆகியோர் தமது ஆகஸ்ட் மாதச்சம்பளத்தை வழங்க முன்வருவார்களா?

Ibnuasad