​கொரோனாவுக்கு மருந்தாக பிராணிகளுக்கு கொடுக்கும் மருந்து வகையொன்று

  • 11

நாட்டில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு இலக்காகும் செல்லப்பிராணிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்தானது, கொரோனா நோயாளிகளை குணப்படுத்த மிகவும் பொருத்தமானதாக அமையுமென பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1975 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த மருந்து, அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுண்ணிகளின் தொற்றுநோய்களுக்கு மேலதிகமாக மனிதர்களுக்கு ஏற்படும் வைரஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மருந்து கொரோனா நோயாளிகளுக்கு ஏற்றது என்று சில மருத்துவர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐவர்மெக்டின் (Ivermectin) எனப்படும் இந்த மாத்திரையின் விலை 100 ரூபா எனவும், கொரோனாவுக்கு முன்னதாக மாதமொன்றுக்கு 1000 மாத்திரைகள் வரையில் விற்பனையானதோடு, கொரோனாவுக்கு பின்னர் 30,000 மாத்திரைகள் வரை விற்பனையாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று உள்ள ஒருவர் நாளொன்றுக்கு 3 மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் நோயை குணமாக்கும் என்பதோடு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பை நிரந்தரமாக குறைக்கும் என்று அமெரிக்காவில் நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு இலக்காகும் செல்லப்பிராணிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்தானது, கொரோனா நோயாளிகளை குணப்படுத்த மிகவும் பொருத்தமானதாக அமையுமென பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கல்ல தெரிவித்துள்ளார்.…

நாட்டில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு இலக்காகும் செல்லப்பிராணிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்தானது, கொரோனா நோயாளிகளை குணப்படுத்த மிகவும் பொருத்தமானதாக அமையுமென பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கல்ல தெரிவித்துள்ளார்.…