பாணந்துறையில் இடம் மாறிய கொவிட் ஜனஸாக்கள்

  • 12

பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றின் காரணமாக முஸ்லிம் பெண் ஒருவரும், சிங்களப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பாணந்துறை ஜயசிங்க ஒழுங்கையில் வசித்து வந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பின்னர் இது தொடர்பில் அவர்களது உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பாணந்துறை-மினுவம்பிட்டி பொது மயானத்தில் (28) பிற்பகல் 2 மணிக்கு சடலத்தை தகனம் செய்வதற்கு தகனசாலை பராமரிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த நேரத்திற்கு சடலம் தகனத்திற்காக தகனசாலைக்கு கொண்டுவரப்படவில்லை. பின்னர் மேற்கொண்ட தேடுதலில் சடலம் மருத்துமனையின் பிணவறையில் இருந்து காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இது தொடர்பில் பாணந்துறை மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சடலம் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருந்த முஸ்லிம் பெண்ணொருவரின் சடலத்திற்கு பதிலாக மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதிக்கு மாற்றி அனுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பிரேதம் முஸ்லிம் பெண்மணியுடைய சடலம் என்பது தெரியவந்தால் தகனம் செய்யப்படவில்லை. அந்த ஜனஸா செய்த ஏதோ ஒரு நல்ல காரியம் அவரை தகனம் செய்வதில் இருந்தும் தடுத்திருக்கிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

கோவிட் ஜனாஸாக்களை பார்ப்பதற்கும் அனுமதி வழங்கப்படாமையினால் இது தொடர்பில் அதிகாரிகளும் உறவினர்களும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றின் காரணமாக முஸ்லிம் பெண் ஒருவரும், சிங்களப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பாணந்துறை ஜயசிங்க ஒழுங்கையில் வசித்து வந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றின் காரணமாக முஸ்லிம் பெண் ஒருவரும், சிங்களப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பாணந்துறை ஜயசிங்க ஒழுங்கையில் வசித்து வந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…