கடும் மழைக்கு மத்தியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை – இத்தாவில் உள்ள பெண்களுக்கு விசேட ஏற்பாடு

  • 13

இன்றைய தினம் (02.09.2021) கொடபிடிய கிராம சேவகப் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது. இங்கு 980 பேருக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொடபிடியாவில் நேற்றிரவு முதல் மழையுடனான காலநிலை நிலவுகின்றது. என்றாலும் மக்கள் இன்று மழைக்கு மத்தியிலும் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றுவதற்கு கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக ஏனைய பிரதேச தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, தடுப்பூசியை பெற்றுக் கொள்ள தடுப்பூசி ஏற்றும் மையத்திற்கு வர முடியாத கணவனை இழந்து வீடுகளில் இந்தாவில் இருக்கும் பெண்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான விசேட நடவடிக்கைகளை பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் மேற்கொண்டிருந்தார்.

அவ்விசேட நடவடிக்கையின் கீழ் பெண் சுகாதார வைத்திய அதிகாரிகளைக் கொண்டு இந்தாவில் உள்ள பெண்களுக்கு தத்தமது வீடுகளிலே தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் நாளைய தினம் (03.09.2021) பானந்துகம, கனகலகம, போறாத்தோட்ட கிராம சேவகப் பிரிவுகளுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஸதாத் மகா வித்தியாலய ஆரம்ப பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மற்றும் 30 வயதுக்கு கீழ் பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் தெரிவித்தார். என்றாலும் ஒரு சிலர் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்தார். Ibnu Asad

இன்றைய தினம் (02.09.2021) கொடபிடிய கிராம சேவகப் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது. இங்கு 980 பேருக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடபிடியாவில் நேற்றிரவு முதல் மழையுடனான காலநிலை…

இன்றைய தினம் (02.09.2021) கொடபிடிய கிராம சேவகப் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது. இங்கு 980 பேருக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடபிடியாவில் நேற்றிரவு முதல் மழையுடனான காலநிலை…