நியுஸ்லாந்து தாக்குதல் இனரீதியான தாக்குதல் அல்ல – நியுஸ்லாந்து அரசாங்கம்

  • 8

நியுஸ்லாந்து தாக்குதல் இனரீதியான தாக்குதல் அல்ல என்று  நியுஸ்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நியுஸ்லாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்  குற்றவாளி மட்டுமே இந்த செயல்களுக்கு பொறுப்பென்று தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதல் ஒரு தனிநபரால் நடத்தப்பட்டது, இது ஒரு நம்பிக்கை, இனம் அல்லது கலாச்சாரம் சார்ந்த தாக்குதல் அல்ல என்று குறிப்பிட்டார்.

இன்று (03.09.2021) நியூசிலாந்தின் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆடன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைகளை கொண்டிருந்த அவரின் பெயரை வெளியிட நியூசிலாந்து விரும்பவில்லை.

2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ள இந்த நபர் 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியவராக கருத்தப்பட்டுள்ளார். தீவிர கண்காணிப்பு வலயத்தில் இருந்தபோதே இவர் இன்று மக்கள் மீது தாக்குதலை நடத்தி 6 பேரை படுகாயமடைய செய்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக நியுஸ்லாந்தின் கொழும்பு உயரஸ்தானிகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம், சோகத்துடன், ஆக்லாந்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ஒப்புக்கொள்வதாக குறிப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடினமான நேரத்தில் தாக்குதல்களில் காயமடைந்தவர்களுடனோ அல்லது வேறு விதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான அனுதாபங்களை வௌியிட்டுள்ளது.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியது போல், குற்றவாளி மட்டுமே இந்த செயல்களுக்கு பொறுப்பேற்கிறார். இந்த தாக்குதல் ஒரு தனிநபரால் நடத்தப்பட்டது, ஒரு நம்பிக்கை, இனம் அல்லது கலாச்சாரம் அல்ல.

நியூசிலாந்தின் இலங்கை சமூகத்தின் கொடி கிவி சமுதாயத்தின் ஒருங்கிணைந்த மற்றும் பொக்கிஷமான பகுதியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை போன்ற ஆசியா நாடுகளில் இவ்வாறான ஒரு தாக்குதல் இடம்பெற்றால் இன ரீதியான தாக்குதலாக சித்தரித்து குறித்த இனத்தையே குற்றவாளிக் கூண்டில் வைக்கும் அவலநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நியுஸ்லாந்து தாக்குதல் இனரீதியான தாக்குதல் அல்ல என்று  நியுஸ்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. நியுஸ்லாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்  குற்றவாளி மட்டுமே இந்த செயல்களுக்கு பொறுப்பென்று தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதல் ஒரு தனிநபரால் நடத்தப்பட்டது,…

நியுஸ்லாந்து தாக்குதல் இனரீதியான தாக்குதல் அல்ல என்று  நியுஸ்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. நியுஸ்லாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்  குற்றவாளி மட்டுமே இந்த செயல்களுக்கு பொறுப்பென்று தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதல் ஒரு தனிநபரால் நடத்தப்பட்டது,…