முகவர்கள் உம்ராவுக்கு பணம் சேகரிப்பது குற்றம் – கண்டுபிடித்தால்  அனுமதிப்பத்திரம் ரத்து

  • 6

இலங்கையில் இருந்து புனித உம்ராவுக்குச் செல்வதற்கான அனுமதி சவூதி அரேபியாவினால் இதுவரையிலும் வழங்கப்படாத நிலைமையில் முகவர்கள் உம்ரா செல்வதற்கான ஆயத்தங்களிலும் அவர்கள் பணம் சேகரிப்பதிலும்  ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் முகவர்கள் மீதான குற்றச் சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்களுடைய அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளரும் ஹஜ் குழுவின் ஊடகப் பேச்சாளருமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையிருந்து முஸ்லிம்கள் உம்ராவுக்கு செல்வதற்கான அனுமதி இன்னும் சட்டபூர்வமாக வழங்கப்படவில்லை. கொரோனாவால் சவூதி அரேபியா முழு நாடும் முடக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்களுடைய புனித ஹஜ் உம்ரா கடைமைகள் கூட இடை நிறுத்தப்பட்டு இருந்தவையே. ஆனால் தற்பொழுது நாடு திறக்கப்பட்டு உம்ரா போன்ற சமய வழிபாடுகள் நடைபெற்றுவருகின்ற போதிலும் வெளிநாட்டவர்களுக்கான முழுமையான அனுமதி இன்னும் வழக்கப்பட வில்லை.

இக்கட்டான சூழ்நிலையில் உண்மை எவையென எமது முஸ்லிம்கள் ஆராய்ந்து பார்க்காமல் முகவர்களை நம்பி உம்ரா செல்வதற்காக முற்பணங்கள் செலுத்தியுள்ளனர்.

உம்ராவுக்கான அனுமதி வழங்கப்படா சந்தர்ப்பத்தில் இலங்கை முஸ்லிம்களாகிய நீங்கள் முகவர்களுக்கு பணங்களைக் கொடுத்து ஏமாற வேண்டாம். சில முகவர்கள் உம்ராவுக்கு அழைத்துச் செல்வதற்காகக் கூறி சிலரிடம் பணம் அறவிடப்பட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன.

ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் முஸ்லிம்கள் மிகக் கூர்மையாகவும் தூரநோக்குடனும் அவதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

இத்தருணத்தில் உம்ராவுக்கு அழைத்துச் செல்லும் முகவர்கள் பிழையான அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈட பட வேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதுடன் இது தொடர்பில் உம்ரா முகவர் நிலையங்களின் சங்கங்கள் கூடிய கவனம் செலுத்தி நடந்து கொள்ளல் வேண்டும்.

இல்லையேல் மோசடிகளில் ஈடுபடும் முகவர்களுடய அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். TK

இலங்கையில் இருந்து புனித உம்ராவுக்குச் செல்வதற்கான அனுமதி சவூதி அரேபியாவினால் இதுவரையிலும் வழங்கப்படாத நிலைமையில் முகவர்கள் உம்ரா செல்வதற்கான ஆயத்தங்களிலும் அவர்கள் பணம் சேகரிப்பதிலும்  ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும்…

இலங்கையில் இருந்து புனித உம்ராவுக்குச் செல்வதற்கான அனுமதி சவூதி அரேபியாவினால் இதுவரையிலும் வழங்கப்படாத நிலைமையில் முகவர்கள் உம்ரா செல்வதற்கான ஆயத்தங்களிலும் அவர்கள் பணம் சேகரிப்பதிலும்  ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும்…