அதிசயங்கள் அற்புமானவை

வாழ்வில் எத்தனையோ
எதிர்ப்பாராத இழப்புகள்
ரத்தம் சிந்தாத காயங்கள்
தலை குனித்த அவமானங்கள்
நிஜமான ஏமாற்றங்கள்
நினையாத துரோகங்கள்
தவிடு பொடியாகிப்
போன எதிர்ப்பார்ப்புகள்
கலங்க வைத்த மாற்றங்கள்
கதற வைத்த உண்மைகள்
உதறித் தள்ளிய பொய்கள்
சின்னாபின்னமான கனவுகள்.

இப்படி எத்தனையோ வலிகள்
ஏதோ ஒரு வகையில்
ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும்
வெளியில் சொல்ல முடியாமல்
கரைந்து போன
கண்ணீர் துளிகளின்
மௌனமான வலிகள்

அந்த வலிகளுக்குள்
ஒரு வெறுமை இருக்கும்
அந்த வெறுமைக்குள்
இனம்புரியாத
ஒரு விரக்தி இருக்கும்

தளர்ந்த நடையுடன்
நடக்கும் போது தான்
அதிசயங்களை தேடி
விழிகள் அலைகிறது

எத்தனை நாட்கள்
எத்தனை மாதங்கள்
எத்தனை வருடங்கள்
என்று தெரியாது
என்றாலும் இது ஒரு
இரகசிய தேடல்
இன்னும்
எனக்குள் இருக்கிறது

கானல் நீராகிப் போன
தேடல்கள்
கரை தொடாமல்
கரைந்து போன
அலைகள்
இனியாவது
அதிசயமாக ஒரு
விடியல் விடியுமா

இனியும் அதிசயங்கள்
நடக்கப் போவதில்லை என்று
நினைக்கவும் முடியாது

இனியாவது நிகழலாம்
இன்றாவது நிகழலாம்
அதற்கும் ஒரு நேரம்
வேண்டும் அல்லவா?

அந்த ஒரு நொடிக்காக
அந்த ஒரு நாளுக்காக
காத்திருக்கும் போது
எதிர்ப்பாராமல்
நிகழும் ஒரு மாற்றம்
அதிசயம் தான்

அது இலகுவில் நடந்திடாது
பல வலிகளை
பல கண்ணீர்
துளிகளை கடந்த
பிறகு தான் நிகழுமா?

அழுத பிறகு தானே
சிரிக்கலாம்
இருண்ட வானம் தானே
விடியலாம்

அதிசயங்களை
காண வேண்டும் என்றால்
பொறுமை வேண்டும்

திடமான
நம்பிக்கையுடன் காத்திரு
உன் காத்திருப்பும்
அதிசயம் நிகழ்த்தலாம்!

உண்மையில் அதிசயங்கள்
அற்புதமானவை!
நீ அறிந்தாலும்
அறியாவிட்டாலும்
அது தான் நிஜம்!

Noor Shahidha
SEUSL
Badulla
Author: admin