உயர்நிலை ஐசியு வெண்டிலேட்டர் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

  • 8

Fight cancer குழுவுடன் இணைந்து Expo lanka holdings PLC இன் நிதி உதவியில் ஒவ்வொன்றும் 3.69 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று இயந்திரங்கள் (மொத்தப்பெறுமதி 11 மில்லியன் ரூபாய்க்கு மேல்) (செப்டம்பர் 04) சுகாதார அமைச்சில் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் சார்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டாக்டர் சஞ்சீவ முனசிங்க மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு உயர்நிலை ஐசியு வெண்டிலேட்டர் (High end ICU Ventilators) இயந்திரங்களையும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் துனை சுகாதார இயக்குனர் ஜெனரல் டாக்டர் W. K. விக்கிரமசிங்க, கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சமன் பத்திரண மற்றும் கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாகரி கிரிவந்தேனிய ஆகியோரிடம் சுகாதார அமைச்சில் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் Expo Lanka நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவன மூத்த மேலாளர் (Sustainability & CSR) திரு. அப்துல் லத்தீப் சஜீத் இல்யாஸ் அவர்களும் பைட் கன்சர் குழு சார்பாக அக்குழு இணைத் தலைவர்களான திரு.ருக்மன் வீரரத்ன, திரு.மெஹ்ராஜ் சாலி, செயலாளர் திரு.நாரத ஹேரத், மற்றும் செயற்குழு உறுப்பினர் முஹமட் அஷ்பாக் அவர்களும் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரபுக்வெல்ல கருத்து தெரிவிக்கையில் இது போன்ற அத்தியாவசிய உபகரணங்களை மருத்துவமனைகளுக்கு அன்பளிப்புச் செய்து சுகாதார சேவையை வலுப்படுத்தியமைக்கு இந் நட்செயலுக்காக பாராட்டு தெரிவித்தார்.

இந்த நன்கொடை மற்றும் இயந்திரம் குறித்து குறிப்பாக கருத்து தெரிவித்த மருத்துவமனை வைத்தியர்கள் இந்த ஐசியு வென்டிலேட்டர் இயந்திரங்களி்ன் முக்கியதுவத்தை விளக்கி,கொவிட் போராட்டத்திற்கும் மற்றும் அவசர பிரிவுகளுக்கும் மிகவும் பயனுடையது எனக்கூறி தங்கது நன்றியினை தெரிவித்தனர்.

பைட் கன்சர் குழு மற்றும் அதன் இஸ்தாபகர் MSH மொஹமட் மற்றும் உலகெங்கிலும் உள்ள பைட் கன்சர் குழு உறுப்பினர்களின் ஆதரவுடன், இந்த திட்டமானது பொது மக்களுடனும் Expo Lanka போன்ற நிறுவனங்களுடன் இணைந்து எமது சொந்தங்களின் உயிரைக் காக்க தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதோடு தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு 80 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய குறைந்தது 20 இயந்திரங்களை வழங்க எதிர்பார்ப்பதாக அதன் இணைத் தலைவர் மெஹெராஜ் சாலி கருத்துத் தெரிவித்தார்.

ஊடக பிரிவு
பைட் கன்சர் குழு

Fight cancer குழுவுடன் இணைந்து Expo lanka holdings PLC இன் நிதி உதவியில் ஒவ்வொன்றும் 3.69 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று இயந்திரங்கள் (மொத்தப்பெறுமதி 11 மில்லியன் ரூபாய்க்கு மேல்) (செப்டம்பர் 04)…

Fight cancer குழுவுடன் இணைந்து Expo lanka holdings PLC இன் நிதி உதவியில் ஒவ்வொன்றும் 3.69 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று இயந்திரங்கள் (மொத்தப்பெறுமதி 11 மில்லியன் ரூபாய்க்கு மேல்) (செப்டம்பர் 04)…