பரீட்சைகளுக்கான திகதியை அறிவித்தது கல்வியமைச்சு

  • 8

கோவிட் -19 காரணமாக பிற்போடப்பட்ட க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர் தரம், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தர பரீட்சைகளை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடத்தவும், க.பொ.த சாதாரண தர பரீட்சைகளை அடுத்த (2022) வருடம் பெப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை நடத்தவும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நவம்பர் 14 ஆம் திபதி நடத்தவும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவை முன்னாள் கல்வி அமைச்சரின் அறிவுரையின் கீழ் முன்மொழியப்பட்ட திகதிகள் என்றும் இத் திகதிகளில் கோரிக்கைகள் மற்றும் சூழ்நிலைகளை பரிசீலித்த பிறகு இதில் மாற்றம் ஏற்பலாம்” என்றும் அவர் மேலும் கூறினார்

மேலும் தன்னால் இது தான் இறுதியான திகதி என்று உறுதியாக குறிப்பிட முடியாது என்றும் இவை முன்மொழியப்பட்ட திகதிகள் என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.

கோவிட் -19 காரணமாக பிற்போடப்பட்ட க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர் தரம், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின்…