பலாதாரமணம், காதி நீதிமன்றம் நீக்கப்படும் – அலிசப்ரி

  • 9

யார் எதிர்த்தாலும் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் திருமண சட்டம் மாத்திரமல்ல சுமாராக 50 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பொது திருமணச் சட்டத்திலும் சர்வதேச திருமண முறைகள் போன்று திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

அதாவது இருவர் இணைந்து வாழ முடியாவிடின் இலங்கையில் வற்புறுத்தி வாழ வைக்கும் நடைமுறை உள்ளது. அதற்கு பதிலாக பிரிந்து செல்லும் விதத்தில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட வரைவுகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.

இது முஸ்லிம்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல. அனைத்து இலங்கையர்களுக்காகும் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.

பொதுச் சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் பட்டோர் திருமணம் முடிக்க முடியாது. ஆனால் கண்டியச் திருமணச் சட்டத்தில் 16 வயதில் திருமணம் முடிக்கலாம். எனவே அதனையும் 18 வயதாக அதிகரிக்க அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முஸ்லிம் திருமண சட்டதிருத்தம் குறித்து நான் மாத்திரம் கதைக்கவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

எனவே சட்டத்தில் கட்டாயம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

சிறுமிகளுக்கு திருமணம் முடிக்க அனுமதிக்க முடியாது எனவே முஸ்லிம் பெண்களின் திருமண வயது 18 ஆக அதிகரிக்கப்படும். மேலும் திருமணப் பதிவில் பெண்களுக்கு கையொப்பம் இட அனுமதிக்கப்படும்.

எனது தீர்மானம் காதி நீதிமன்ற முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதாகும். அதாவது காதி நீதிமன்றம் பகிரங்கமாக இருக்க வேண்டும், பெண்களுக்கும் காதிகளாக நியமனம் பெற முடியும் என்பனவாகும். என்றாலும் காதி நீதிமன்ற முறை நீக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மேலும் பலதார மணமும் நீக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை எனக்கு விரும்பிய முறையில் திருத்தவோ மாற்றவோ முடியாது. அதற்கு முதலில் அமைச்சரவை அனுமதி பெறவேண்டும்.

அமைச்சரவை 30 பேர் உள்ளனர் அதில் நான் மாத்திரமே முஸ்லிம். அதிலும் தேசிய பட்டியல் முறை மூலம் வந்தேன். எனவே அமைச்சரவை முடிவின் படியே செயற்பட வேண்டும்.

யார் இதை எதிர்த்தாலும், ஆதரித்தாலும் தீர்மானம் எடுப்பது அமைச்சரவை மாத்திரமாகும். தற்போது சட்டம் வரைவு இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் சட்டமூலம் வௌியிடப்படும். அப்போது மேலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனின் உயர் நீதி மன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார். LNN Staff

யார் எதிர்த்தாலும் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம் திருமண சட்டம் மாத்திரமல்ல…

யார் எதிர்த்தாலும் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம் திருமண சட்டம் மாத்திரமல்ல…