போர்வையில் தடுப்பூசிக்காக அதிகாலை முதல் காத்திருந்த இளைஞர் யுவதிகள்

  • 10

20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்காக தடுப்பூசி வழங்க ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள இன்று அதிகாலை 5:00 மணி முதல் இளைஞர் யுவதிகள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு காத்திருந்ததை இன்று கொடபிடிய கிராம சேவகப் பிரிவில் அவதானிக்க முடிந்தது.

அதுரலிய பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று மாறை கொடபிடிய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதில் வழங்கப்பட்ட பைஸர் வகை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவே இவ்வாறு ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் செளக்கியப் படையணியின் ஏற்பாட்டின் கீழ், அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பாலின் பங்களிப்புடன் இடம்பெற்ற குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் 20 – 30 வயதுக்கு உட்பட்ட 3036 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் 28 கிராம கிராம சேவகப் பிரிவில் உள்ள இளைஞர்களுக்கு தடுப்பூசி வழங்கி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், பிரதேச முஸ்லிம் யுவதிகளின் நலன் கருதி, 28 கிராம சேவகப் பிரிவுகளில் உள்ள பல பாடசாலைகளில் கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டதாக குறிப்பிட்டார்.

மேலும் நாளைய தினம் (10.09.2021) கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய கனிஷ்ட பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்ட கனகலகம, மாரகொட கிராம சேவகப் பிரிவிற்கு உட்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் கொடபிடிய கிராம சேவகப் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதற் கட்ட  முதலாம் இரண்டாம் டொஸ் தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் பூரணமடைந்து விட்டதாக குறிப்பிட்டார். என்றாலும் அதில் தடுப்பூசி ஏற்றாதவர்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்காக அதிகாலை 5:00 முதல் காத்திருந்தாகவும். காலை எட்டு மணியளவில் பிரதான வீதியிலும் சுமார் 500 மீற்றருக்கு இளைஞர் யுவதிகள் வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. Ibnuasad

20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்காக தடுப்பூசி வழங்க ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள இன்று அதிகாலை 5:00 மணி முதல் இளைஞர் யுவதிகள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு காத்திருந்ததை…

20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்காக தடுப்பூசி வழங்க ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள இன்று அதிகாலை 5:00 மணி முதல் இளைஞர் யுவதிகள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு காத்திருந்ததை…