“புதையல் தேடி“ கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைப்பு!
-
by admin
- 1
2019ல் வெளிவந்த பஸ்யாலையைச் சேர்ந்த எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும் கவிதாயினியுமான எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா அவர்களுடைய கவிதை நூலாகிய “புதையலைத் தேடி” கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த கவிதை நூல் முதல் மூன்று நிலைகளுக்குள் தெரிவாகியுள்ளது.
இந்த நூலுக்குக் கலாசாரத் திணைக்கள வாயிலாக கலாசார அமைச்சு வருடாவருடம் வழங்கும் சிறந்த கவிதை நூலாக (முதல் மூன்றுகளாக) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கவிதாயினி இஸ்மத் பாத்திமா அவர்களுக்கு கிடைத்த இரண்டாவது தேசிய (விருது)/சான்றிதழ் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கவிதாயினி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
கலாசார அமைச்சின் நடுவர்களுக்கும் எனது எழுத்துப் பயணத்தில் ஊக்கம் தரும் இலக்கிய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். Ibnuasad
2019ல் வெளிவந்த பஸ்யாலையைச் சேர்ந்த எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும் கவிதாயினியுமான எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா அவர்களுடைய கவிதை நூலாகிய “புதையலைத் தேடி” கவிதை நூல் தேசிய சாகித்திய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த…