மன்னிப்புக் கேட்டார் ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி

  • 10

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதற்காக முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி மன்னிப்புக் கேட்டுள்ளார். நாட்டில் அமைதியை உறுதி செய்வதற்காகவே அவ்வாறு செய்தததாக அவர் கூறினார்.

பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக்கு ஏற்ப, நாட்டை விட்டு வெளியேறியதாக ட்விட்டரில் கனி பதிவிட்டுள்ளார். துப்பாக்கிகள் வெடிக்காமல் இருக்க தாம் நாட்டைவிட்டு வெளியேறுவது ஒன்றே சிறந்த வழி என்று நம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்முடைய அரசாங்கம் திடீரென வீழ்ந்ததற்கு வருந்துவதாக அவர் தெரிவித்தார். நாட்டிலிருந்து மில்லியன்கணக்கான டொலரை எடுத்துச் செல்லவில்லை என்று கனி கூறினார்.

கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கான் தலைநகர் காபுலை நோக்கி தலிபான்கள் முன்னேறிய நிலையிலேயே கனி நட்டை விட்டு வெளியேறினார். தமக்கு மக்களை கைவிடும் நோக்கம் இருக்கவில்லை என்றும் அப்போது ஒரே வழியாக அது இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தற்போது, மனிதநேய அடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடைக்கலமாகியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதற்காக முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி மன்னிப்புக் கேட்டுள்ளார். நாட்டில் அமைதியை உறுதி செய்வதற்காகவே அவ்வாறு செய்தததாக அவர் கூறினார். பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக்கு ஏற்ப, நாட்டை விட்டு வெளியேறியதாக ட்விட்டரில் கனி…