இறக்குமதி பதிலீட்டுக் கொள்கை எமது நாட்டுக்கு சாத்தியப்படுமா?

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

இலங்கையில் கோவிட் 19 கொள்ளை நோய் மிக மோசமான காலகட்டத்தை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. உலகில் நோய்த்தொற்று ஆரம்பகாலகட்டத்தில் நோயைக்கட்டுப்படுத்துவதில் இலங்கை எய்திய சாதனைகள் பலமட்டங்களிலும் பாராட்டுக்கு உரித்தானது. ஆனால் நாட்டில் முழு முடக்க நிலை நீக்கப்பட்டு நாடு திறந்து விடப்பட்டதன் பின்னர் நோய்த்தொற்று இரண்டாம் அலை முன்றாம் அலைஎனத் தொடங்கி தற்போது கட்டுக்கடங்காத வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்வந்த உத்தியோக பூர்வத் தகவல்களின் படி 321429 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். இவர்களில் 286265 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமாகிய நிலையில் 4821 பேர் இறந்துபோயுள்ளனர். நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் துரிதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. கடந்த 5 ஆம் திகதி மாத்திரம் 2674 பேர் நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் 94 பேர் இறந்துள்ளனர். இந்த நாள்வரை ஒரு நாளில் ஏற்பட்ட இறப்புகளின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

எனவே நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி ஒட்சிசன் உதவி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாட்டில் பரவிவரும் புதியவகையிலான கொவிட் வைரஸ் பிறழ்வுகள் காரணமாக முன்னரைவிட நோயின் தீவிரத்தன்மை அதிகரித்து அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. எனவே முன்னரைப்போலல்லாது இறப்புகளின் எண்ணிக்கையும் கவலைக்கிடமான வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது. நாட்டிலுள்ள சுகாதாரத்துறைக் கட்டமைப்பு கையாளக்கூடிய சாத்திய மட்டத்தைவிட தற்போது நாட்டில் நோயாளர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே அதிகரித்து விட்டதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்பத்திரிகள் நிரம்பிவழிவதாகவும் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாத அளவுக்கு அவற்றின் கொள்ளளவு நிரம்பிவழிவதாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாக புகைப்படங்களும் வீடியோக்களும் பரவிப் பயமுறுத்துகின்றன.

நோய்தொற்று தொடர்பான அனுபவமுள்ள நிபுணர்கள் அடுத்துவரும் சிலவாரங்கள் அபாயமிக்கவை என எச்சரிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து நோய்தொற்று அபாயகரமான கட்டத்தை நோக்கி நகர்வது தெரிகிறது. இந்த நோய் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களை மாத்திரமன்றி அதிஉயர்ந்த செல்வந்த வகுப்பினரையும் பாதித்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. இலகுவில் யாரையும் சந்திக்காத மிகுந்த சுகாதாரப் பாதுகாப்புடைய மேல்மட்ட விஐபிகளையும் இந்நோய்தொற்று பாதித்திருப்பதையும் அத்தகைய மேல்மட்ட மற்றும் மேல்மட்ட நடுத்தரவர்க்கத்தினரும் மரணித்திருப்பதும்; நோய்த்தொற்று பற்றிய ஐயங்களையும் அச்சங்களையும் தோற்றுவித்திருக்கிறது. ஆனால் பொதுமக்களைப் பொறுத்தமட்டில் இன்னமும் இந்த நோய்பற்றிய அச்சம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. முறையாக முகக்கவசம் அணியாதவர்களையும் சமூக இடைவெளியைப்பேணாதவர்களையும் நாளாந்தம் கொழும்பு போன்ற பட்டிணப்பகுதிகளிலேயே அதிக எண்ணிக்கையில் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளின் நிலைமைபற்றிக் கூற வேண்டியதில்லை.

அதேவேளை முகக்கவசங்களை ஒரு அணிகலனைப்போல பயன்படுத்தம் கனவான்களையும் சீமாட்டிகளையும் நாம் பார்க்கிறோம். முகக்கவசங்களின் வெளிப்பறத்தில் வைரஸ் ஒட்டிக்கொண்டிருக்கலாம் என்ற சிந்தனை ஏதுமின்றி அதனைக்கழற்றி காற்சட்டைப் பொக்கற்றிலோ பேர்ஸிலோ வைத்துக் கொண்டு போகிறவர்கள் உண்டு. மறுபுறம் ஒரு மீற்றர் சமூக இடைவெளி என்ற விதிமுறையை மீறி முன்னே நிற்பவனின் தோளுக்கு மேலே மூச்சுவிடுமளவுக்கு நெருக்கமாக வரிசைகளில் நிற்பவர்களையும் காணமுடிகிறது. புதியவகை வைரஸ்கள் பரவ ஒரு சில நொடிகளே போதுமானதெனக் கூறப்படுகிறது.

இளம் சந்ததியும் இப்போ அதிகளவில் வெளியே போக ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் மத்தியில் சமூக இடைவெளி பேணல் என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் வைரஸ் பரவல் முன்னரைவிடத் தீவிரமடையும் என நிபுணர்கள் எச்சரிப்பதை விளையாட்டாகக் கொள்ள முடியாது. இதுவரை இருந்த காலத்தை விடவும் மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து செல்லவேண்டிய காலப்பகுதி இதுவாகும். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தத்தமது சுகாதாரப்பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. நொய்த்தொற்று ஏற்பட்டால் வைத்திய சாலையை நாட முடியாத நிலைக்கு சுகாதாரக் கட்டமைப்புகள் நிரம்பிவழியுமாயின் இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்டது போல மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் மடிய நேரிடலாம்.

எனவே வருமுன் காத்துக்கொள்வதே ஒரே தெரிவாக உள்ளது. வரும்போதோ வந்த பின்னரோ காக்க முடியாத கையறு நிலைக்கு நோயாளிகளும் சுகாதாரத்தரப்பிரும் வீழ்ந்து விடக்கூடாதென்பதே இப்போதைய பிரார்த்தனையாகும். நோய்த்தொற்றக் கூடிய அனைத்து வழிகள் தொடர்பாகவும் அதீத கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்பட்டால் மாத்திரமே நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறலாம். நோய் வந்தபின் மன்னிக்கவும் நான் தவறுசெய்துவிட்டேன் என்று விலகிச் செல்லக் கூடிய ஒரு விவகாரமல்ல இது. ஆகவே மிகவும் கட்டுப்பாட்டுடனும் பொறுப்புடனும் ஒவ்வொரு குடிமகனும் நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.

Select your currency
LKR Sri Lankan rupee
%d bloggers like this: