சிறந்த பொறுமை
என் பொறுமைக்கு
ஏளனப்புன்னகை செய்து
என் கண்ணீரை
சுவீகரித்துக் கொண்ட
உறவுகளே!
வாழ்க்கைப் படுவது என்பது
சிறிய விடயம் அல்ல!
திருமணம் என்பது
மேடையில் ஏறி அலங்காரமிட்டு!
ஆபரணங்கள் அணிந்து!
புத்தாடை உடுத்தி!
தலைகுணிந்த படியும்,
புன்னகையுடனும் அமர்ந்து!
கணவன் வந்த பின்னே
தலை குணிந்து தலைநிமிர்ந்து
கொள்வது மட்டுமல்ல!
அந்த மேடையை விட்டு
கீழே இறங்கி
வாழ்க்கையில் இறுதி வரை
சோதனைகளுடனும்,
வேதனைகளுடனும்,
நம்மை முடி கொண்டு
சொந்தமிட்ட உறவை!!
உயிர் போகும் கட்டம்
வந்தாலும் கூட!
தூக்கி வாறி போட்டு விட்டு
விவாகரத்து செய்வதுமாய்
அழைந்து திரியாது!
தீயினையும் நீரென அருந்தி!
தீச் சகிதியிலும் – இனிய
புன்னகை செய்து
நடப்பவைகளை
படிப்பினைகளாக ஏற்று
பொறுமை கொண்டு
பெறுமையுடன் வாழ்வதே
திருமணம்!
அவசரம் கொண்டு
அடைவதில்லை திருமணம்!
அழகிய பொறுமை செய்து
இருமனங்கள்
யாரென்றே அறியாத – ஒரு
உறவுக்காய் பிரார்த்தித்து
இணைவதே திருமணம்!
நான் அழகிய பொறுமை தனை விரும்புகிறேன்!!
உங்களைப் போல அவசரப் பிரிவையன்றி!!