ஊரடங்கில் தபாலகங்கள் திறக்கும் நாட்கள்

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள காலப் பகுதியில் வாரத்தில் 4 நாட்களுக்கு மாத்திரம் நாட்டிலுள்ள தபால், உப தபாலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தபாலகங்களில் பணி புரியும் ஊழியர்களின் போக்குவரத்தின் போதான சிரமங்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொவிட் தொற்று ஏற்படும் அவதானம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் அனுமதியின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் திறந்திருக்கும் எனவும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அவை மூடப்பட்டிருக்குமெனவும்  தபால் மாஅதிபர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, தபாலகங்களால் மேற்கொள்ளப்படும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை, இம்மாதம் 17, 18ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உரிய தபால் நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post Offic Open 4 Days in a Week (1)
Select your currency
LKR Sri Lankan rupee
%d bloggers like this: