தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு மீட்பு

நாராஹென்பிட்டி தனியார் மருத்துவமனையின் முதலாம் மாடியில் உள்ள கழிப்பறையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குறித்த மருத்துவமனையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய பிரமுகர்கள் இந்த வைத்தியசாலைக்கு வருவதால் அவர்கள் எவரையாவது இலக்கு வைத்து இது கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன

இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை சோதனை செய்து பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மேலும் இன்று காலை (14.09.2021) ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஞானசார தேரர் இலங்கையில் இன்னொரு தாக்குதல் நடைபெறலாம் என்று உறுதியாக கூறியமை குறிப்பிடத்தக்கது. LNN Staff

Select your currency
LKR Sri Lankan rupee
%d bloggers like this: