மலர்க்கூட்டத்திற்குள் மங்கை

மஞ்சள் மலர்க் கூட்டத்திற்குள்
மறைந்திருக்கும் மங்கையே
உன்னருகிலிருக்கும் கூடையை
மலர்களால் நிரப்ப வந்தாயோ?

இல்லை உன்னுள்
குடிகொண்டிருக்கும் அத்தனை
சோகங்களையும் மறப்பதற்கென
இங்கு மலர்க்கூட்டங்களோடு
இன்பங்கான வந்தாயோ?

இவை அத்தனையும் அன்றி
நீ ஓர் மலர்களின்
நேசக்காரியான மங்கை என
தெரிவிக்க வந்தாயோ?

Z. Shifra izzath
Commerce
Ak/as – siraj maha vidyalaya
Akkaraipattu