ஊரடங்கு

ஊரடங்கை மீறி
ஊரிலிருந்து நீங்கி
ஊதியம் தேடி
ஊர்ந்து வந்தபின்
ஊரடங்கு என்று
ஊனின்றி வாழென
ஊடகத்தில் கருத்தை
ஊரறிய கூற முடியுமா?

ஊமைபோல் நிற்கனுமா?
ஊர்பலாய் தெரியாத போல
ஊனின்றி தவித்தாலும்
ஊரடங்கை மீறி
ஊதாரியாக குடிக்க
ஊர்குடி மக்கள்
ஊர் மேய்தபின்னும்
ஊழ்விதிக்கு தீர்வு
ஊரடங்கு என்று
ஊனின்றி உறக்கமின்றி
ஊட்டில் இருக்க முடியுமா?
ஊதியமின்றி ஏழைகள்

ஊரறிய கூறனும்
ஊனின்றி உயிர்காக்க
ஊட்டில் இருக்காமல்
ஊர்மக்கள் அனைவரும்
ஊன் தேடி
ஊழியம் செய்ய
ஊரடங்கை மீறி
ஊர்த்துவமும் சென்றிடனும்

ஊரடங்கு எல்லாம்
ஊனின்றி வாழ்வோருக்கும்
ஊழியமின்றி வாழ்வோருக்கும்
ஊர்வீதி வியாபாரிக்கும்தான்
ஊழல் செய்வொருக்கு
ஊரடங்கு இல்லை

ஊரடங்கு என்று அரசு
ஊழ்விதியை காரணம்காட்டி
ஊரை ஏமாற்றியது போதும்
ஊர்மக்கள் முட்டாளுமல்ல
ஊரடங்கு என்று
ஊனமாக நின்றதுபோதும்
ஊரடங்கை மீறி
ஊண் தேடி செல்வோம்

ஊனின்றி உறக்கத்தில்
ஊரறிய எழுதவில்லை
ஊரடங்கு அரசின்
ஊனமுற்ற தன்மையை
ஊரறிய எழுதினேன்
ஊர் மக்கள் உணர
ஊர் பாஷையில்
ஊடகத்தில் கவிதை

இப்னு அஸாத்