சிறைச்சாலையில் 56 பட்டதாரிகள்

  • 15

நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு 19,856 கைதிகள் தண்டனை அறிவிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தண்டனையை அனுபவித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 1,165 கைதிகள் க.பொ.தர உயர்தரம் வரை கல்வி கற்றவர்கள் என்பதோடு, 3,845 பேர் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, தண்டனைப் பெற்று வருபவர்களில் 56 பட்டதாரிகளும் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தரம் 8 வரை கல்வி பயின்றுள்ள 7,352 கைதிகளும், தரம் 1 முதல் 5 வரை மாத்திரம் கல்வி கற்றவர்கள் 2,417 பேர் காணப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாடசாலைகளுக்கே செல்லாத கைதிகள் 590 பேர் மாத்திரமே இருப்பதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு 19,856 கைதிகள் தண்டனை அறிவிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தண்டனையை அனுபவித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 1,165 கைதிகள் க.பொ.தர உயர்தரம் வரை கல்வி கற்றவர்கள் என்பதோடு,…